உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் - 31

மந்திரங்களையுமாதல், அல்லதவற்றுட் சில பலவற்றை யாதல் ஓதியபடியே நெய்யைச் சொரிந்து முத்தீ வேள்வி வேட்க. அங்ஙனம் வேட்குங்கால், மணமக்களிருவரும் பூ நெற் பொரி மணத்தூள் சந்தனம் முதலியவைகளை வேள்வித் தீயில் இட்டு டு வணங்குமாறு செய்க.

திருநீறு மஞ்சள் ப

அதன்பின், குங்குமம் இட்ட பொற்றாலிகோத்த சரட்டை ஒருதட்டிற் பூமாலை பூ மஞ்ச ளரிசியுடன் இறைவன் எதிரே வைத்து, மேற்காட்டிய "மண்ணின் நல்ல வண்ணம் வாழலாம்" என்னுந் தேவார மந்திரச் செய்யுளையும், “பொன்னுமெய்ப் பொருளுந் தருவானைப் போகமுந் திருவும் புணர்ப்பானை " என்னுந் தேவார மந்திரச் செய்யுளையும் ஓதிக்கொண்டே வேள்வி யாசிரியன் தாலிச்சரட்டை யெடுத்து மணமகன் கையிற் கொடுத்து, அதனை அவன் மணமகள் கழுத்தில் அணியு மாறு செய்க. அங்ஙனம் அவன் அதனை அணிகையில், மகப்பெற்ற மாதரார் நால்வர் கூடஇருந்து உதவி செய்து, முன்னே காட்டியபடி “காதலற் பிரியாமே கவவுக்கை நெகிழாமே" என்னும் வாழ்த்துரை சொல்லிப் பூவும் மஞ்சளரிசியும் மணமக்கள்மேற் சிதறி வாழ்த்துமாறு செய்க.

அதன்பின், மணமக்கள் ஓங்கார வரையினுள் எழுந்து நின்றபடியே ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த பூமாலையைக் கழற்றி மற்றவர்கழுத்தில் மாற்றி மாற்றி அணிவிக்குமாறு மும்முறை செய்க. பின்னர் மணமக்கள் இருவரும் ஓங்கார வரையின் வெளியே வந்து, அதனுள் வளர்ந்தெரியுந் தீப் பிழம்பையும் ஓங்கார வரையையும் மூன்றுமுறை வலமாகச் சுற்றிவந்து இறைவன் இறைவி திருவுருவங்களையுந் தீயையும் ஆசிரியனையும் வணங்கி விடைபெற்று, மனையகத்தே சென்று பாலும் பழமும் அருந்தி இனிதுறைவாராக.

இனி, L மணஞ்செய்வித்த அன்றிரவே மணமகன் மணமகளைக் கூடி யுறையுமாறு செய்தலே நன்று. இதுவே நம்பண்டை தமிழ்முன்னோர் செய்த முறை. இக்காலத்தவர் அங்ஙனம் அவரை உடனே ஒன்று கூட்டாமற் பல நாட்கள் கழித்தோ, அல்லது பலதிங்கள் கழித்தோ அவரை ஒருங்கு கூட்டுகின்றனர். திருமணம் நடந்தபிற் சில திங்கள்கழித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/273&oldid=1593007" இலிருந்து மீள்விக்கப்பட்டது