உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

249

பல

அங்ஙனம் அவரை ஒன்று கூட்டுதற்கிடையிற் பிழைபாடுகள் நேர்ந்து விடுதலுங் காணப்படுதலால், அங்ஙனம் அவரை இடைவிட்டுக் கூட்டுதல் ஆகாது.

இனி, பெண்மக்கள் மங்கைப்பருவம் அடையாமற் பேதை பெதும்பைப் பருவத்தினராய் இருக்கையிலேயே மணஞ் செய்துவிடும் பார்ப்பனர்தம் பொருந்தாச் செயலைப் பார்த்து, தமிழரிற் சிலரும் பேதைமணஞ் செய்கின்றனர். இது மிகவுங் கடியற்பாலதாகும். இறைவன் திரு வருளியக் கத்தால் அரசியலாரே பேதை மணத்தைத் தடுத்துச் சட்டம் செய்திருத்த லால், அச்சட்டத்திற்குக் கட்டுப் பட்டாவது நந்தமிழர் தமது பொருந்தாச் செயலை ஒழித்து விடுவாராக. அதுகிடக்க.

இனி, மேற்காட்டிய முத்தீ வேள்விச் சடங்கின் கருத்து அறியாதார்க்கு அதனை ஒருசிறிது விளக்கிக் காட்டுதும்; எத்தொழிலைச் செய்தாலும், இறைவனை நினைந்தபடியாய் அதனைச் செய்து தம்மையுந் தாஞ்செய்யுந் தொழிலையுந் தூய்மை செய்து கொள்ளுதலே ஆறறிவுடைய மக்கட் பிறவி யெடுத்தார்க்குரிய மாண்பாகும். இறைவனை நினையாது செய்வோர், இறைவனை நினையமாட்டாத விலங்கு களையே ஒப்பர். ஆதலால், நந்தமிழ் மக்கள் தொன்று தொட்டு இன்றுகாறும் இறைவனை நினைந்து வழிபட்டே இம்மை மறுமைக்குரிய எத்தகைய செயலையுஞ் செய்து வருபவராய்த் திகழ்கின்றனர். அது பற்றியே, முத்தீவேள்வி தொடங்கும் முன், காணவுங் கருதவும் அரியனான இறைவனைக் காணவுங் கருதவும் எளியவான திருவுருவங் களின் நிறுத்தி அவற்றின் வாயிலாக அவனை நெஞ்சுருகி வழிபடுதல் மரபாயிற்று. இறைவன் றிருவுருவங்களில், அம்பலவாணர் அம்மை திருவுருவம் மிகச் சிறந்தன; ஏனென்றால், தோற்றம் நிலை இறுதி மறைப்பு அருள் என்னும் ஐந்தொழில்களும், உயிர் களினிடத்தும் உலகங் களினிடத்தும் ஓவாது நடைபெறுமாறு செய்யும் இறை வனது ஐந்தொழில் ஆட்டத்தைக் காட்டுவது அம்பல வாணரம்மை திருவுருவமே யாதலாலென்க. அதற் கடுத்த படியாய், ஆடுமயின் மீதமர்ந்த முருகப்பிரான் அம்மை திருவுருவமும் அங்ஙனமே ஐந்தொழிலாட்டத்தை அறிவிக்கும் அடையாளமாய் இருத்தலாலும், அப்பனும் அம்மையுங்கூடிய கூட்டத்தில் முருகப்பிரான் பிள்ளை யாய்த் தோன்றினாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/274&oldid=1593008" இலிருந்து மீள்விக்கப்பட்டது