உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

  • மறைமலையம் – 31

போல மணமகனும் மணகளுங் கூடுங் கூட்டத்தில் நன்மகப் பேறுண்டாதற்கு அஃதோர் அடையாளமாய் அமைதலாலுந் திருமண வேள்விக்கு முருகப் பிரான் நாச்சிமார் திருவுருவ வணக்கமும் இன்றியமையாத தாயிற்றென் றுணர்ந்து கொள்க.

இனித், தீ ஒன்றேயாயினும், அது தனியேயும் ஞாயிறு திங்களிலேயும் விளங்குதல்பற்றி மூன்றாக வழங்கப் படுகின்றது. தீயே இறைவன், அல்லது இறைவன்றன் றிருவுருவம் ஆகும் என்பதனை மேலே விரிவாக விளக்கி யிருக்கின்றேம்; ண்மையைச் சைவசமயாசிரியரான திருநாவுக்கரசு

இவ்வு நாயனாரும்,

“எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன

துருவ ருக்கம தாவ துணர்கிலார் அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்

நரிவி ருத்தம தாகுவர் நாடரே

என வற்புறுத்தி விளக்கியிருத்தல் காண்க. இங்ஙனமே பகலவனும் இறைவன்றன் றிருவுருவ மாவன் என்பதனைத் தேற்றும் பொருட்டே அந்நாயனார்,

66

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்

அருக்க னாவான் அரனுரு அல்லனோ இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங்

கருத்தி னைநினை யார்கன் மனவரே”

கூட்டி

என அருளிச் செய்திருத்தல் நினைவிற் பதிக்கற்பாற்று. ஆகவே, மூவகையாக விளங்கும் ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றனையும் ஒருகாலத்து ஓரிடத்து ஒருங்கு வழிபடுதலே முத்தீ வேட்டலாகும். தீயானது எரியுங்கால் அடி யில் அகன்று நுனியிற் குவிந்து நிற்பது; அதனால் அது முக்கோண வடிவினதென்று நுவலப்படும். சிவஞான சித்தியாரும் (2, 67)

“மண்புனல் அனல்கால் வான்பால் வடிவுநாற் கோண மாகுந், தண்பிறை மூன்று கோணந் தகும்அறு கோணம் வட்டம்”

என மண்ணுக்கு நாற்கோண வடிவும், நீருக்குப் பிறை வடிவும், நெருப்புச்சுடருக்கு முக்கோண வடிவுங், காற்றுக்கு அறுகோண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/275&oldid=1593009" இலிருந்து மீள்விக்கப்பட்டது