உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

251

வடிவும், வான்வெளிக்கு வட்டவடிவும் நிறுத்த முறையே கூறுதல் காண்க. அதனால் அனலுக்கு அறிகுறி யாக ஒத்தநிகளம் உள்ள மூன்றுகோடுகளால் ஒரு முக் கோண வடிவு வரையப்பட்டது. அதன்பின் ஞாயிறு மண்டிலத்திற்கு அறிகுறியாக ஒரு வட்ட வடிவும் அம் முக்கோணத்தின் உள்ளே வரையப்பட்டது; ஞாயிறு என்றும் வட்ட வடிவாகவே ளங்குதலால் அதற்கு வட்டக் கோடு அடையாளமாயிற்று. இனி, அவ்வட்டவடி வினுள்ளே ஒரு வில்வடிவு தீட்டியது திங்களுக்கு அஃதோர் அடையாளமாதல் பற்றியேயாம். முழுமதியும் வட்டமாகவே விளங்குதலால், அதற்கு வில்வடிவு தீட்டுதல் பொருந் துமோவெனின், முழுமதி வட்டமாய் விளங்கும் நேரம் பதினைந்து நாட்களுக்கு ஒருகால் ஒரு நொடிப்பொழுதே யாம்; மற்ற நாட்களிலும் மற்ற நேரங்களிலுமெல்லாம் அதன் வடிவு பல அளவாய் வளையும் வில்வடிவினையே ஒத்திருத்தல் நுண்ணூர்வாற் கண்டுகொள்க. ஞாயிறுந் திங்களுந் தீயின்கூறாய் அடங்க, எங்கும் நிறைந்துள்ள தீ அவ்விரண்டிலும் ஏனை ஒளிப்பொருள்களிலும் அடங் டை யாளமாகிய முக்கோணவடி

6

காமையின், தீயின் வினுள்ளே, ஞாயிறு திங்களின் அடையாளங்களாகிய வட்ட வடிவு வில்வடிவுகள் அடக்கி வரையப்பட்டன.

பரப்பப்பட்ட

இனி, அம்முக்கோணத்தின்மேற் ஆற்றுமணல் இடத்தின் தூய்மையை அறிவிப்பது.பச்சரிசி யுமி வளர்க்குந் தீக்கு ஒரு பற்றுக்கோடு, புழுங்கலரிசி யுமி முன்னமே நெருப்பில் வெந்ததாகலிற், புதுவதாக வேட்கப்படுந் திருமண வேள்விக்கு அதுபோல் முன் வேகாத புதுப் பச்சரிசியுமியே வேண்டப்பட்டது.

இனி, நெருப்புக்குப் பற்றுக்கோடாக எடுத்த சுள்ளிகள் பாற்பசையுள்ள மரங்களிலிருந்து வந்தனவாகும். பாற் பசையில்லாத மரங்கள், காதலன்பாகிய பாற் பசையினை யுடைய திருமண வேள்விக்கு ஆகாதன ஆயின.

னிக், கற்பூரச்சுடர் வேள்வித் தீயினை மூட்டுதற்குப் பயன்படுதலுடன், தூய உயிர் இறைவனொளியிற் கரைந்து அதனோடு ஒன்றி ஒன்றாகும் நிலையினையும்; மண் வடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/276&oldid=1593010" இலிருந்து மீள்விக்கப்பட்டது