உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் - 31

கல்வடிவு செம்புவடிவுகளில் அமைக்கப்பட்ட இறைவன் இறைவி திருவுருவங்கள் அவர்தம் உண்மை ஒளியுருவுக்கு அடையாளங்களே யாகுமல்லால் அவை தாமே

றைவனு

ருவம் ஆகா; மற்று ஒளியே கடவுளின் மெய்யுருவம் ஆகும் என்னும் வாய்மையினையும் அஃது அறிவுறுத்தல் காண்க.

இனி நெய்யும் நெற்பொரியும் நமதுணவில் இன்றி யமையாத பண்டங்களுக்கு அடையாளமாகும். உணவின் கொழுமையால் உடம்பு செழிக்க, உடம்பின் கொழுமை யால் மக்கள் எமக்குமேல் யார்!' எனச் செருக்கி நிற்கின்றனர். அச்செருக்கினால் அவர் தம்மைப் படைத்த இறைவனையும் மறந்து, தம்போன்ற மற்றை மக்களுக்கும் பலதீங்குகள் செய்து, தாமும் பாழாய்ப் போகின்றனர்! அங்ஙனம் அவர்கள் கெட்டழியாமல் தமது செருக்கை இறைவனாகிய தீயில் இட்டுத் தூய்மைசெய்து, அவ்வாற்றால் இறைவனிடத்தும் ஏனை எல்லா உயிர்களிடத்தும் மெய்யன்புடையராய் ஒழுகுதலை அவர்கள் கடைப்பிடித்தல் வேண்டு மன்றோ? இவ்வொழுக லாற்றைத் தெரித்தற் பொருட்டே நெய்யும் நெற்பொரியும் பெய்து முத்தீவேள்வி வேட்க வேண்டுவதாயிற்றென்க. இங்ஙனமே, பூ பழம் சந்தனம் முதலான பண்டங்களெல்லாந் தாமே பயன்படுத்திக் கொண்டு தந்நயம் பாராட்டாமல், அவற்றைப் படைத்து வைத்து எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்கு முதலில் ஏற்பித்துப், பின்னர் அவன் தந்த அருட்கொடையாகத் தாம் பணிவுடன் ஏற்று அவற்றை வழங்குதல் வேண்டும் என்பதனை நினைவுறுத்தல் வேண்டியே அவையும் பிறவும் இறைவன் றிருவுருவின் முன்னே படைக்கப்படலாயின என்க.

திருநீறானது கடவுளாகிய தீயினால் உயிர்களும் ஏனை யெல்லாப் பொருள்களுந் தூய்மைசெய்யப்பட்டுத் தூயவாய் விளங்குமாற்றை அறிவிக்கும் அடையாளமாகும். குங்குமம் இறைவனது நெற்றிக்கண்ணுக்கு அடையாளமாக நெற்றியிற்

பொறிக்கப்படுவதாகும்.

கண்

றைவனது நெற்றிக் செந்நிறத்ததான தீயை உமிழ்வதாகலின், அதற்கு அடையாள மாக நெற்றியில் தீட்டப்படுங் குங்குமமுஞ் சிவந்த நிறத்தினதாக இருக்கவேண்டுமேயல்லாமல், நீலங் கறுப்பு முதலான நிறங்களை யுடையதாக இருத்தலாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/277&oldid=1593011" இலிருந்து மீள்விக்கப்பட்டது