உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

253

இனி, முக்கோணத்தின் அருகே நிறுத்தப்படும் மட் குடங்கள் இரண்டும் அம்மையையும் அப்பனையுங் குறிக்கும் அடையாளங்கள் ஆகும். அக்குடங்கண்மேற் சுற்றப்படும் நூல் நரம்புகளுக்கும், அவற்றின் உட்பெய்த நீர் உடம்பினுள் ஓடுங் குருதிக்கும், அக்குடங்களுள் ஒன்றின் நீரிலே L ட்ட செம்மணி சிவபெருமானுயிருக்கும், மற்றொன்றின் நீரிலே இட்ட நீலமணி அம்மையின் உயிருக்கும், அக்குடங்களின் வாயிற் செருகிய ஐந்திலை மாங்கொத்து 'ஓம் சிவம்' என அவையிற்றின் வாயில் எல்லா எழுத்தொலிகட்கும் முதலாய் ஒலிக்கும் ஐந்தொலி கட்கும், அம்மாங் கொத்துகளின் மேல் வைக்கப்பட்ட குடுமித் தேங்காய்கள் இரண்டும் இரண்டு குடுமித் தலைகட்கும் அடையாளங்களாதல் கண்டுகொள்க.

இனிக், கண்ணாற் காணப்பட்டுக் கையாலுந் தொடப் படுதற் கிசைந்த பருப்பொருள்களான நிறைநீர்க் குடங்க ளிரண்டும் நமது வழிபாட்டின் பொருட்டு நாம் செயற்கை யாக அமைத்துக் கொண்ட அம்மையப்பரின் அடையா ளங்களே யல்லாமல், அவை இயற்கையாயுள்ள இறைவன் இறைவியின் றிருவுருவங்கள் அல்ல; ஆதலாற், கண்ணாற் காணப்படும் அத்துணையே யன்றிக் கையிற் பிடிபடாத அனற்பிழம்பான

ஒளியோ இறைவன் இறைவிக்கு இயற்கை யாயுள்ள திருவுருவாமென்பதனை முன்னமே விளக்கி யிருக்கின்றேம். அதுபற்றியே, இயற்கைச் சுடரொளி துலங்கும் இரண்டு அகல்விளக்குகள் செயற்கைக் குடங்கள் இரண்டின் பக்கங்களில் அம்மையப்பரின் உண்மைத் திருவுருவங்களாக அமைக்கப்பட்டனவென்க.

இனி, முக்கோணம் முதலியவைகளை உள்ள க்கிய ஓங்கார வரை வரைந்துவைத்தது. எல்லா ஒலிகட்கும் முதலாய் இயற்கையே தோன்றி ஒலிக்கும் ஓங்கார ஒலியின் இயக்கத்தால் அருவநிலையில் நின்ற எல்லாப் பொருள் களும் உருவ நிலையைப் பெற்று, அவ்வோங்கார வட்டத்தி னுள்ளே நிற்கும் உண்மையினையும், இறைவன் ஒளியுரு விலே மட்டுமன்றி ஒலியுருவிலும் நின்று எல்லாப் பருப் பொருள்களையுந் தோற்றுவித்து, தன்னுள் அடக்கிக் காக்கும் அருட்பெரு நிகழ்ச்சியினையும் அறிவித்தற் பொருட்டேயா மென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/278&oldid=1593012" இலிருந்து மீள்விக்கப்பட்டது