உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் - 31

“உயிரினை யிழந்த உடலது தன்னைக் காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக் கூறை களைந்து கோவணங் கொளுவி ஈமத் தீயை எரியெழ மூட்டிப் பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப் போய்த்தம ரோடும் புந்திநைந் தழுவது சலமெனப் படுமோ சதுரெனப் படுமோ

என்னும் கபிலரகவற் பகுதியாலும், “சென்றே எறிப ஒருகாற் சிறுவரை நன்றே எறிப பறையினை-நன்றே காண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து

என்னும் நாலடியார் நூற்செய்யுளாலும் (3,4) நன்கறியக் கிடக்கின்றது.

இனிச், சைவ வைணவச் சிறப்பொழுக்கம் வாய்ந்த குடிமக்களுள்ளே, தாரை தம்பட்டம் இல்லாமற் சங்கு ஊதிச் சேமக்கலம் அடித்துத் திருவாசகம், திருவாய்மொழி ஓதிய படியாயப் பிணத்தை எடுத்துச் சென்று சுடுதலும், அல்லது புதைத்தலும், அல்லது கல்லறைகட்டி அதனுட் பிணத் தையோ பிணஞ்சுட்டபின் எஞ்சிய எலும்பையோ இறக்கி மூடி அதன்மேற் சிவலிங்கத்தை இருத்தி வழிபாடு புரிதலும் ஆங்காங்கு நடைபெற்று வருகின்றன. ஆரவார மின்றி அமைதியாய் நடத்தப்படும் இப்பிணச்சடங்கு உறவினர்க்கும் பிறர்க்கும் மனவுருக்கத்தைத் தந்து, நிலையாத இம்மை வாழ்க்கையின் இயல்பையும் நிலையான மறுமை வாழ்க்கையின் நீர்மையையும், அம்மறுமை வாழ்க்கையை அளிக்கும் அம்மையப்பராகிய முழுமுதற்கடவுளின் ஒப்பற்ற உதவியையும் நினைவில் வருவித்தலின் இப்பிணச்சடங்கு அறிஞர்க்குச் சிறந்ததொன்றாகவே காணப்படுகின்றது. இத்தகைய பிணச் சடங்கைத் தமிழரில் நடத்தும் ஒரு தமிழ்வகுப்பினர்

பணிச்சவர்' என்று சொல்லப்படுகின்றனர். இவர்கள் ‘திருவாசகம்’ ‘பட்டினத்துப் பிள்ளையார் பாடல்' முதலியவை களை ஓதிக்கொண்டு பிணச்சடங்கு நடத்துதலைக் காணுங்காற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/281&oldid=1593015" இலிருந்து மீள்விக்கப்பட்டது