உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

32. ஊழ்வினை

இனிப், பண்டைக்காலந்தொட்டு இன்றை வரையில் உள்ள தமிழ்மக்கள் அனைவரும், உயிர்களுக்கு முற்பிறவி பிற்பிறவி பல உண்டென்றும், அவ்வப் பிறவிகளில் அவ்வவ்வுயிர்கள் சய்த செயல்கள்

அடுத்தடுத்துச்

அவ்வுயிர்களின் நினைவில் மிக அழுத்தமாய்ப் பதிந்து பின்னர் அவ்வுயிர்களால் எளிதில் நீக்க முடியாத பழக்கமாக நிலைத்து டுகின்றனவென்றும், அப்பழக்கத்தால் அவ்வுயிர்கள் அப்பிறவியிலும் அடுத்துவரும் பிறவிகளிலும் நல்வினை தீவினைகளைச் செய்து அவற்றின் பயனாக இன்பதுன்பங்களை நுகர்ந்து வருகின்றனவென்றும் ஆராய்ந்து கண்டு, ஆராய்ந்து கண்ட அக்கொள்கையில் விடாப்பிடியாய் நின்று வாழ்க்கை செலுத்துபவர்களாய்

இருக்கின்றனர். உயிர்கள்

பல

பிறவிகளினூடு சென்று, தாஞ்செய்த ஊழ்வினை வயத்தால் இன்பதுன்பங்களை நுகராநிற்கும் என்னும் இக்கொள்கையை முதன்முதற் றமிழ்மக்களே ஆராய்ந்து கண்டு, அதனை ஏனை மக்கட்குழுவினர்க்கும் வழங்கினோர் ஆவர். தமிழரல்லாத ஆரியரும் அவ்வாரிய இனத்திற் சேர்ந்த ஏனையோரும் க்கொள்கையின் உண்மையைச் சிறிதுமே யறிந்தவரல்லர். இருக்குவேதத்தில் ஆரியராற் பாடப்பட்ட பதிகங்களில், L மறுபிறவியுண்மையும் ஊழ்வினையுண்மையும் எள்ளளவு தானுங் குறிப்பிடப்படுதலைக் காணேம். ஆரிய இருக்கு வேதப் பதிகங்களுக்குப் பின், தமிழாசிரியருந் தமிழா சிரியர்க்கு மாணாக்கராகி மெய்யுணர்வு பெற்ற ஆரியக் குருமாரும் ஆக்கிய மட்டுமே மறுபிறவி யுண்மை ஊழ்வினையுண்மையைப் பற்றிய குறிப்புகள் காணப்படு கின்றன. இது வடநூலாராய்ச்சியிற் பெரும் புலமைவாய்ந்த வரான மாக்டனல்' என்னும் ஆசிரியராலும் பிறராலும்

வடநூல்களில்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/283&oldid=1593017" இலிருந்து மீள்விக்கப்பட்டது