உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்கெடுத்துக்

  • தமிழர் மதம் காட்டப்பட்டிருகின்றது.

259

மறுபிறவியும் ஊழ்வினையும் உயிர்கள்பாற் றொடர்ந்து நிற்கும் உண்மையை முதன் முதற் கண்டவர்கள் இவ்விந்திய தேயத்தின் பழங் குடிகளான தமிழ்மக்களே ஆவரென்பதுந், தமிழர்பாலிருந்தே ஆரியர் இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டாரென்பதும், இவ்வாசிரியராலேயே ஆராய்ந்து விளக்கப்பட்டிருக்கின்றன.

L

இஞ்ஞான்று உலகம் எங்கணும் இருந்து உயிர்வாழும் பலகோடி மக்களின் பலகோடிவகையான வாழ்க்கை நிலைகளை உற்றுநோக்கி உணருங்கால் இவர்கள் எல்லா ருடை ய உயிர்களும் இந்த ஒரு பிறவியுடன் அவிந்து இல்லையாய்ப்போம் என்றோ, அல்லது இந்த ஒரு பிறவிக் குப்பின் நல்லன செய்த உயிர்கள் துறக்கவுலகத்தை அடைந்து இன்புற்றிருக்கத் தீயனசெய்த உயிர்கள் நிரயத் தழுந்தி எக்காலுந் துன்புற்றே இருக்குமென்றோ, அல்லது இவ்வுயிர்கள் இந்த ஒரு பிறவியிலேயே அனைத்தும் நீங்கி நிறைவுற்றிருக்குமென்றோ கூறுதற்கு மெய்யறிவு பெற்றார் எவரும் ஒருப்படமாட்டார். ஏனென்றால், அதன் காரணத்தைச் சிறிது விளக்குதும்.

குறைபாடு

இப்போது நாம் அடைந்திருக்கும் இப்பிறவியானது நமக்கு எதற்காக வந்திருக்கின்றதென்பதனை நாம் ஆராய்ந்து பார்ப்பமானால், இது நமக்கு மேன்மேல் அறிவையும் மேன்மேல் இன்பத்தையுந் தருதற் பொருட் டாகவே வந்திருத்தல் தெற்றெனப் புலனாகின்றது.ஈன்றணிய மகவினைப் பாருங்கள்! உயிரற்ற ஒரு மரப் பாவைக்கும் உயிருள்ள அக்குழந்தைக்கும் வேற்றுமை மிகுதியாயில்லை. பசியெடுத்தக் கால் அழுவதும் பால் பருகுவதும் உறங்குவதும் மலநீர் கழிப்பதுமாகிய சில செயல்களைத் தவிர, மற்ற வகை களிலெல்லாம் பிறந்த மகவு மரப்பாவையினையே பெரிதும் ஒத்திருக்கின்றது. ஆனாற், பின்னர்ச் சிலநாட் செல்லச்செல்ல அக்குழந்தை கண் விழித்துத் தன் தாயையுஞ் சுற்றியுள்ள பொருள்களையும் பார்க்கின்றது. தன் தாயின் குரலொலியையும் பிறருடைய குரலொலியையுங் கேட்டுப் பகுத்துணர்ந்து கொள்கின்றது. இங்ஙனமே அது வளரவளர மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாக அஃது அறிய வேண்டு வனவெல்லாம் பையப்பைய அறிந்து வருகின்றது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/284&oldid=1593018" இலிருந்து மீள்விக்கப்பட்டது