உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் - 31

அவ்வறிவின் வாயிலாக இன்பத்தையும் அடைகின்றது, துன்பத்தையும் அடைகின்றது. இன்னும் நாட்செல்லச் செல்லத் தவழவும் உட்காரவும் நடக்கவும் ஓடவும் பாடவு மெல்லாங் கற்றுக் கொள்கின்றது. பிறகு ஐந்தாண்டு சென்று சிறுவனான வுடன் பள்ளிக்கூடஞ் சென்று மொழியறிவு பெறுகின்றது; அதன் பிற் பொருளறிவும், இளைஞ னானவுடன் கலையறிவும், பெற்று அவற்றின் வாயிலாக வாழ்க்கையில் வந்து கவியும் பல துன்பங்களையும் நீக்கிப் பல்வகை யின்பங்களையுந் துய்த்தற்குத் தெரிந்து கொள்கின்றது. ஆகவே, இப்பிறவி வந்திருப்பது உயிர் களுக்கு மேன்மேல் அறிவையும் இன்பத்தையுந் தருதற்கே யென்பது நன்கு விளங்குகின்றதன்றோ? மேலும், இப் பிறவியிலேயே பேரறிவும் பேரின்பமும் பெறுதற்கியலாமல் இடையிலே உயிர்கள் மாய்ந்து போகுமானால், அவைகட்கு முதன்முதற் பிறவியைக் கொடுத்த முதல்வன் அவை பேரறிவும் பேரின்பமும் பெறும்வரையில், அவைதமக்கு அடுத்தடுத்துப் பிறவிகளைப் படைத்துக் கொடுத்த படியாய் இருப்பன் அல்லனோ? பாருங்கள்! சில பல உயிர்கள் தாயின் கருப்பையிற் சிலநாட் கருவாய்த் தங்கிய பின் அழிந்து விடுகின்றன! சில பல பிறந்தவுடனும் பிறந்து சிலநாட் கழிந்த பின்னும் அல்லது சில திங்களோ சில ஆண்டுகளோ கடந்த பின்னும் மாண்டு போகின்றன! இன்னும் இளம் பருவத்தே இறக்கும் உயிர்கள் எத்தனை! காளைப் பருவத்தே இறக்கும் உயிர்கள் எத்தனை! நடுப்பருவத்தும், முதுமைப்பருவத்தும் அறியும் இன்பமும், அறிவும் இன்பமும் பெருகப் பெறாமல் இறக்கும் உயிர்கள் எத்தனை! இத்தனை கோடியுயிர்களும் இவ்வொரு பிறவியுடன் முடிந்து போகுமானாற், பிறவி களின் வாயிலாகவே அறிவும் இன்பமும் உயிர்களுக்கு வழங்கக் குறித்த எல்லாம்வல்ல ஆண்டவன் நோக்கம் நிறைவேறுவதெப்படி?

ன்னும் "பார்மின்கள்! எத்தனைபேர் கண்ணில்லாக் குருடர்களாய்ப் பிறக்கின்றார்கள்! எத்தனைபேர் செவிடர் களாய்ப் பிறக்கின்றார்கள்! எத்தனைபேர் ஊமர்களாயும், எத்தனைபேர் கைகாலற்ற முடவர்களாயும், எத்தனைபேர் தொழுநோய் கொண்டவர்களாயும், எத்தனைபேர் ஒரு வேளையுணவு கூடக் கிடைக்கப் பெறாத வறியவர்களாயும், எத்தனைபேர் எவ்வளவு அறிவு புகட்டினும் அது புகப்பெறாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/285&oldid=1593019" இலிருந்து மீள்விக்கப்பட்டது