உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

261

முழு மடையர்களாயும் பிறவியெடுத்து அலைக்கழிகின்றனர். இத்தனை கோடி பேரும் இவ்வொரு பிறவியுடன் மாய்ந்து ல்லையாய்ப் போவதானால், இவர்கள் ஏன்றான் அவ்வாறெல்லாம் பிறந்து அளவிலாத் துன்பத்திற் கிடந்துழலல் வேண்டும்? இவர்கட்கெல்லாம் ஒரு நல்வழி யில்லா தொழியுமாயின், இவர்கள் பிறந்ததற்கும் அங்ஙனந் துன்புற்றதற்கும் ஒரு காரணம் வேண்டுமன்றோ? அக்காரணம் இன்னதென்றறிந்தாலன்றி நமதுள்ளம் அமைதிபெறக்

காண்கிலமே.

இன்னும், ஒரு வகுப்பிலிருந்தே பெருமுயற்சியுடன் கல்விபயிலும் மாணாக்கருள் ஒருவன் கூரிய அறி வினனாயும், மற்றொருவன் மழுங்கிய அறிவினனாயும், வேறொருவன் அறிவில்லாப் பேதையாயும், ஒருவன் கற்றவைகளை என்றும் நினைவு கூர்பவனாயும், பிறனொ ருவன் ஓயாது பயின்றும் பயின்றவைகளை மறந்து விடுப வனாயும் இருத்தல் என்னை? இவர்களெல்லாரும் இவ்வொரு பிறவியுடன் மாண்டு மறைந்து போவதானால், இவர்கள் பிறவிக்கு வந்த நோக்கந் தான் யாது? காரண காரியத் தொடர்பாய் எல்லாம் நிகழப்பெறும். இம்மாப் பேருலகில், இவர்கட்கு மட்டுங் காரணம் இல்லாமலே அறிவின் ஏற்றக் குறைவுகள் உண்டாயினவென்றால், ஆராய்ச்சி யுணர்வு சிறிதுடையாரும் அதனை ஒப்புவரோ? உணர்ந்து பார்மின்கள்!

இங்ஙனமே, மக்கள் ஒவ்வொருவருடைய குணங் களிலுஞ் செயல்களிலும் பலவகையான வேறுபாடுகள் காணப் படுகின்றன. ஒருவன் இரக்கநெஞ்சமும் ஈகைக் குணமும் உடையனாயிருக்க, மற்றொருவன் வன் னெஞ்சமுங் கையிறுக்கமும் உடையனாயிருக்கின்றான். ஒருவன் ஈ எறும்பு களையும் அழிக்க மனம் நடுங்குபவனா யிருக்கப், பிறனொருவன் ஆடு மாடு முதலான பேருயிர் களையுங் கொன்று அவற்றின் ஊனைத் தின்பதில் அவா வுடையவனா யிருக்கின்றான். ஒருவன் தன்போன்ற மக்களைத் தன்னுயிர்போற் கருதி அவர்களுக்குத் தன்னா லியன்ற உதவிகளையெல்லாஞ் செய்ய முன் நிற்பவனா யிருக்க, ஏனையொருவன் பொய்வழக்காடிப் பிறருடைமை களைக் கவரவும் அதன்பொருட்டு அவருயிரை மாய்க்கவும் முன் நிற்கின்றான். ஒருவன் பாலும் நீரும் பருகித் தூயனாய் உயிர்வாழப், பிறனொருவன் கள்ளுஞ் சாராயமுங் குடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/286&oldid=1593020" இலிருந்து மீள்விக்கப்பட்டது