உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மறைமலையம் - 31

இயற்கையறிவும் மழுங்கி மாள்கின்றான். ஒருவன் குழல்யாழ் இசைத்துப் பொழுதை மகிழ்வுடன் கழியாநிற்ப. மற்றொருவன் சூதுகாய் உருட்டித் தன் பொருளை யிழந்து வறியனாகின்றான். ஒருவன் தனக்குரிய மாதரை மருவி இம்மை யின்பத்தை இனிது நுகராநிற்க, வேறொருவன் பொருட்பெண்டிரை முயங்கி நோயும் வறுமையும் எய்துகின்றான். இன்னும் இங்ஙனமே மக்கள் குணத்தாலுஞ் செயலாலும் பெரிதும் வேறுபடுதலை நாடோறும் நாம் நங் கண்ணெதிரே கண்டு வருகின்றனம் அல்லமோ? இத்தனை பேருந் தத்தங் குணங்களாலுந் தத்தஞ் செயல்களாலும் விளையும் நன்மை தீமைகளை நுகர்தற்கு வொரு பிறவி போதுமோ?

மக்களின் உடம்பும் அவ்வுடம்பில் அமைந்த அகக் கருவி புறக்கருவிகளும் ன்பதுன்பங்களை ஒரு வரம்பில் வைத்துத்தான் நுகர்தல் கூடுமேயன்றி, வரம்பு கடந்து நுகர்தல் ஏலாது. ஒருவன் சுவை மலிந்த தேமரங்கனியிருந்தி இன்புறுதல் வேண்டின், அதிற் சில கனிகளே அவன் அருந்தல் இயலும்; அச்சிலவற்றிற்குமேற் சிறிது அருந்து தற்கும் அவனது வயிறு

ங்கொடாது. ஒருவன் கண்ணாற் பல அழகிய ஓவியக் காட்சிகளைக் கண்டு மகிழ்வதிலும், அரிய பெரிய நூல்களை ஓதி யுணர்வதிலும் பெரு விருப்பு டையனாயினும், அவன் தன் கண்கள் தாங்கும் அளவுக்கு மேல் அவைதம்மைக் கண்டும் ஓதியும் வருவனாயின் அவன் கண்கள் பழுதுபட்டுக் குருடாதல் திண்ணமன்றோ? ஒருவன் தனக்குரிய மாதருடன்றானும் அளவுக்கு மேல் இன்பந் துய்த்தலில் முனைந்து நிற்பனாயின், அவனதுடம்பு சிறிது காலத்தில் வலி விழந்து நோய்வாய்ப்பட்டு மடிதல் திண்ணமன்றோ? இந்நிகழ்ச்சிகளை உற்றுணருங்கால், மக்கள் யாக்கையானது இவ்வொரு பிறவியிலேயே பேரறிவு விளங்குதற்கும் பேரின்பம் நுகர்தற்கும் இடந்தராத அத்துணை நொய்ம்மை யுடைத்தென்பது நன்கு விளங்கா நிற்கின்றது. ஆகவே, அறிவு பெருகப் பெருக, இன்பநுகர்ச்சி வளர வளர. அவை தமக்கேற்ற நுண்ணிய உடம்புகளும் மேன்மேற் பிறவிகளில் வந்துகொண்டிருக்குமென்பதூஉம் இதுகொண்டு உணரப்படுவதாகும் என்க.

இனி, அறிவு வளர்ச்சிக்கும் இன்ப மிகுதிக்குந் தக்கபடி மேன்மேல் நுட்பம் வாய்ந்த கருவிகளும் அக்கருவிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/287&oldid=1593021" இலிருந்து மீள்விக்கப்பட்டது