உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

தமிழர் மதம்

263

பொதிந்த உடம்புகளும் உயிர்களுக்கு உடன் பொருந்தி வருதலை நாம் நங் கண்ணெதிரே என்றுங் காணலாம். வைக்கோலைத் தின்னும் மாட்டின் நாவுணர்வினையும், அழுகிய ஊனைத் தின்னும் நாயின் வாயுணர்வினையும் எண்ணிப் பார்மின்கள்! தித்திக்கத் தேன்ஒழுகும் பழமுந் தெவிட்டாத தெள்ளமிழ்தாம் பாலுங் கற்கண்டும் நெய் யடிசிலும் அருந்துங் கலைவல்லான் ஒருவனையும் எண்ணிப் பார்மின்கள்! முன்னைய முன்னைய இரண்டும் அறிவிலும் இன்ப நுகர்ச்சியிலும் எவ்வளவு தாழ்ந்த நிலையினவாய், அத் தாழ்ந்த நிலைக்கேற்ற வல்லுறுப்புகளும் அவை பொருந்திய வல்லுடம்புகளும் வாய்ந்தனவா யிருக்கக், கலைவல்ல அறிஞனின் உடம்புங் கருவிகளுமோ எத்துணை மெல்லிய வாய் எத்துணை நுண்ணுணர்வு மிக்கனவாய்த் துலங்கா நிற்கின்றன! இன்னும், மக்கட்பிறவி யெடுத்தாரிலும் ஒரு பானைச் சோற்றை, ஒருமிக்கத் தின்று, ஒருசட்டி காரக் குழம்பை ஒருங்கே குடித்துவிட்டுக், கூர்த்த அறிவின்றி எந்நேரமுந் தூக்கத்திலேயே காலங்கழிப்பாரின் உடம்பை யும் உறுப்புகளையுஞ் சிறிது உன்னிப்பாய்ப் பாருங்கள்! எந்நேரமும் நூலாராய்வதிலுங், கடவுளைக் கண்ணீர் ஒழுக நெஞ்சங் கரைந்து தொழுவதிலும், எல்லார்க்கும் நன்றே செய்வதிலும் செய்வதிலும் உறைத்து நிற்கும் பெரியோன் ஒருவனின் உடம்பையும் உறுப்புகளையும் உணர்வின் தெளிவையும் உன்னித்துப் பார்மின்கள்! அப்போது இவ்வொரு மக்கட் பிறவியிலேயே அறிவின் ஏற்றக் குறைச்சலுக்கும் இன்ப வுணர்வின் உயர்வு தாழ்வுக்கும் ஏற்ற முறையிலே எத்தனை வகையான உடம்புகள் எத்தனை வகையான வேற்றுமை யுடன் மென்மை வன்மைகள் வாய்ந்த இப்பிறவிக்கு வந்திருக் கின்றன வென்பது நன்கு விளங்கா நிற்கும். இங்ஙனமாக மக்கட் பிறவிக்கு வந்திருக்கும் உயிர்களிலேயே அறிவின் ஏற்றத் தாழ்விற்கும் இன்பவுணர்வின் ஏற்றத் தாழ்விற்கும் இசையப் பல்வேறு வகையான உடம்புகளும் அவற்றிற் பல்வேறு வகையான கருவிகளும் மென்மைவன்மை வாய்ந்து நிற்றலை ஆழ்ந்தாராய்ந்து நோக்குங்கால், மக்கட்பிறவி யெடுத்த ஓருயிரே தனதறிவுந் தனதின்ப வுணர்வும் மேன்மேல் விரிந்து விளங்குந் தகைமைக்கு ஏற்ப மேன்மேலுயர்ந்த பல மக்களுடம்பைப் பெற்றுப் பல பிறவி களினூடு செல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/288&oldid=1593022" இலிருந்து மீள்விக்கப்பட்டது