உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

7. ஆரியருட் சாதிவகுப்பு இல்லை

இவ்விந்தியநாட்டுள் வந்து குடியேறுதற்கு முன்னமே மேற்கிளந்த நால்வேறு வகைச் சாதிப்பகுப்பு ஆரியர்க்குள் இருந்ததாயின், அஃது இருக்குவேத முதல் ஒன்பது மண்டிலங் களில் அவராற் பாடப்பட்ட பதிகங்களிற் காணப்படுதல் வேண்டும்; ஆனால், அவைகளில் அது சிறிதுமே காணப் படவில்லை; அங்கே காணப்படுவ தெல்லாம் ஆரியராகிய தமக்கும் ஆரியரல்லாத தஸ்யுக்களுக்கும் இயற்கையாய் உள்ள நிறவேறுபாட்டால் உண்டான வேற்றுமையினைக் காழ்ப்புஏற மனத்திற்பதித்து ஆரியராகிய தம்மைக் காத்து, ஆரியரல்லாத தஸ்யுக்களை அழித்துவிட வேண்டுமென அவர் தந்தெய்வ மாகிய இந்திரனை வேண்டும் வேண்டு கோள் உரைகளேயாம்.

இனி, ஆரியர் கொணர்ந்த பாட்டுக்களுடன், அவர் களைத் திருத்தும் பொருட்டுத் தமிழர் தாம் வணங்கிய உருத்திரர் மேலும், உருத்திரர்க்கு இருப்பிடமான தீக்கடவுண் மேலும் பகலவன் மேலுந் தாம் பாடிய பாட்டுகளையும் ஒன்று சேர்த்து இருக்குவேத ஒன்பது மண்டிலங்களாக வகுத்து வைத்தபின், நெடுங்காலஞ் சென்று இருக்குவேதப் பத்தாம் மண்டிலமாகிய இறுதிப் பகுதி திரட்டிச் சேர்க்கப்பட்டது என ஆராய்ச்சிவல்ல ஆசிரியர் அனைவரும் ஒத்து ஒருமுகமாய் உரைக்கின்றனர். இங்ஙனம் நெடுங்காலத்திற்குப்பின் சேர்க்கப் பட்டதாகிய இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின் தொண்ணூறாம் பதிகத்தின் பன்னிரண்டாஞ் செய்யுளில் மட்டுமே,

ஞ்

“பிராமணர் விராட்புருடனுக்கு வாய்ஆவர்; அவனு டைய ய இரண்டு தோள்களிலிருந்தும் இராஜ்ந்யா உண்டாக்கப் பட்டனர்; அவன் தொடைகள் வைசியர் ஆயின; அவனுடைய அடிகளிலிருந்து சூத்திரர் தோற்றுவிக்கப் பட்டனர்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/82&oldid=1592805" இலிருந்து மீள்விக்கப்பட்டது