உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் - 31

என்று நால்வகைச் சாதிவகுப்பு நவிலப்பட்டிருக் கின்றது. ஆகவே, ஆரியர் வருதற்கு முன்னமே தமிழர்க்குத் தொழில் வேற்றுமைபற்றி இயற்கையாயிருந்த அந்தணர், அரசர், வணிகர், பதினெண்டொழிலாளர் என்னும் மக்கட் பாகுபாடே, மநுவினாலோ அல்லதவன் வழிவந்த வேறெவராலோ நாற்சாதியாக மாற்றப்பட்டு, இருக்குவேதப் ருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தின்கண் நுழைக்கப்படலானமை தெற்றெனப் புலனாகின்றது. இனி, இருக்குவேதப் புருட சூத்தத்தில், தொழிலான் மட்டுமன்றிப் பிறப்பினாலும் பார்ப்பனர்க்கு ஏனையெல்லாச் சாதியாரினும் பார்க்க மிக்கதோர் உயர்வு சொல்லப்பட்டிருத்தலை உற்று நோக்குங் கால், அப் பதிகத்தைப் படைத்து அதனுள் நுழைத்தவர் ஒரு திராவிட ஆரியப் பார்ப்பனரே யாவரென்பது துணியப் படுகின்றது. ஏனென்றால், இஞ்ஞான்றும் ஆரியப் பழக்க வழக்கங்கள் மிகுந்துள்ள வடநாட்டில் உறையும் பார்ப்ப னர்கள் ஊன் உணவு கொள்பவராய் இருத்தலின், அவர் தம்மினத்தவர் அல்லாத மற்றை வகுப்பினரை இழிவுபடுத்தக் காணேம். அவர் ஒரே கூடத்திற் றம்மவர் அல்லாத மற்றை இனத்தவர் காண இருந்து அவர் காண உணவு கொள்ளு தலையும் யாம் வடநாடு சன்ற ஞான்று நேரே கண்டிருக்கின்றேம். மற்றுத் திராவிட ஆரியக் கலப்பிற் றோன்றிய பார்ப்பனரோ, ஏனை வகுப்பினர் அனை வரையும் 'அடிமைகள்' வைப்பாட்டி மக்கள்' எனப் பொருள்படுஞ் “சூத்திரர்” என்னும் இழிசொல்லால் மிக இழித்துப் பேசி, அவரைத் தொடுதலும் ஆகாது, தாம் உணவருந்துங்கால் அவர் தம்மைக் காண்டலும் ஆகாது என ஒரு பெருங் கட்டுப்பாடு வகுத்துக் கொண்டு தாமே இம்மாநிலத் தேவர்கள் எனத் தம்மைத் தாமே உயர்த்துச் சொல்லித் தமக்குப் பிறப்பினாலேயே பெரும் பெருமை தேடுபவரா யிருக்கின்றனர். இத்தன்மையினரான இத் தென்னாட்டுப் பார்ப்பனரன்றி வேறு எவர்தாந் தாம் இறைவனது முகத்தினின்று பிறந்தவர் என்று சிறிதும் அச்சமின்றி அத்தனை நெஞ்சழுத்தத்துடன் கூறத்துணிவர்? அதனை யெண்ணிப் பார்க்குங்கால் தென்னாட்டுப் பார்ப்பனர் எவரோ அப் புருட சூத்தப் பதிகத்தைப் படைத்து இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தில் நுழைத்து விட்டா ரென்பது திண்ணமாய்ப் பெறப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/83&oldid=1592807" இலிருந்து மீள்விக்கப்பட்டது