உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

8. திராவிட ஆரியரில் நாற்சாதி

.

6

இன்னும், நடுநாட்டி லிருந்த திராவிட ஆரியர், இந்தியாவின் வடமேற்கே யிருந்த ஆரியரை இழித்துப் பேசி வந்தமையும், ஆரியர்க்குள் இல்லாத பார்ப்பனச் சாதி நடு நாட்டிலிருந்த இத் திராவிடஆரியர்க்குள் மட்டுமே தோன்றி வளர்ந்தமையும் வடமொழிவல்ல ஆசிரியர் மாக்டானல் என்பவரால் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது! எனவே, திராவிட ஆரியக் கலப்பிற் புதியராய்த் தோன்றிய பார்ப்பனரே தமக்குப் பிறப்பினாலேயே எவர்க்கும் இல்லா ஓர் உயர்வு தேடிக் கொள்ளுதற் பொருட்டும், அவ்வுயர்வு தாம் இறைவனது முகத்தினின்று தோன்றினமை பால் உண்டாயதெனக் கட்டிச் சொன்னாலன்றித் தமிழ்ப் பொதுமக்கள் அதனை ஒப்புக் கொள்ளாரெனக் கண்டு அவரை அவ்வாற்றால் ஏமாற்றித் தமதுயர்வினை நாட்டுதற் பொருட்டுமே அப்புருட சூத்தப் பதிகத்தை இயற்றி அதன்கண் நுழைத்தாராகல் வேண்டுமென்பது சிறிது ஆராய்ந்து பார்க்க வல்லார்க்கும் நன்கு விளங்காநிற்கும். அது விளங்காநிற்கவே, வடக்கே நடுநாட்டிலிருந்து உண்டான பார்ப்பனர் திராவிட ஆரியக் கலப்பிற் றோன்றிய இரு பிறப்பாளரேயன்றித் தனிப்பட்ட ஆரியர் அல்ல மென்பதூஉம், அது பற்றியே அவர் தனிப்பட்ட ஆரியரை நாகரிகம் இல்லா "மிலேச்சர்” என இகழ்வாராயின ரென்பதூஉந் தாமே போதரும் (மநு, 2,23).

ரு

இனி, னி, வடக்கே கங்கை யாற்றை யடுத்த நடுநாட்டிலிருந்த பார்ப்பனரே ஆரியர் அல்லாதபோது, விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள நாடுகளிலும், இத்தென்றமிழ் நாட்டிலும் உள்ள பார்ப்பனர்கள் தம்மை ஆரியரென உயர்த்துப் பேசிக் கொள்வதும், தம்மவரல்லாத தமிழர் அனைவரையுஞ் ‘சூத்திரர்’ என்னும் இழிமொழியால் இழித்துப் பேசி வருவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/84&oldid=1592808" இலிருந்து மீள்விக்கப்பட்டது