உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் - 31 -

அறிவுடையோர் செயலாகுமோ சொல்லுங்கள். சால்லுங்கள். ஆரியர் த்தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்து நிலைபெற்றனர் என்பதற்கு ஏதொரு சான்றும் இயலாமையினாலும்; வட ஆரிய மன்னர் சிலர் தமிழ் மன்னரை இகழ்ந்தமை கேட்டுச் சேரன் செங்குட்டுவன் அவர்மேற் படையெடுத்துச் சென்று அவரை வென்று மீண்டமையுஞ், சோழன் கரிகாற் பெரு வளத்தான் வடநாட்டின்மேற் சென்று அங்குள்ள அரசரை யெல்லாம் வென்று இமயலைமேற் றனது புலிக்கொடியை நாட்டி வந்தமையுஞ் சிலப்பதிகாரத்தால் அறியக் கிடத்தலாலுந், தென்னாடு புகுதற்குத் துணிந்து வந்த ஆரியப் படையினைப் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பான் வென்று துரத்தி னமை பற்றியே அவன் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ் செழியன் எனச் சிறப்புப் பெயர் பெற்றமை புறநானூற்றினால் அறியப்படுதலாலும், விந்திய மலைக்குத் தெற்கே போந்து கலிங்கம் வரையில் வென்ற அசோக அரசன் தமிழ் மூவேந் தரையும் வெல்ல இயலாமல் திரும்பிப் போய்த் தான் வெட்டு வித்த கல்வெட்டு ஒன்றில் அத்தமிழ் மூவேந்த ரையுந் தந் தோழர்கள் எனக் குறித்தமை (அதனால்) விளங்கு தலாலும் வட ஆரியராதல் வடநாட்டு மன்னராதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் பெருந் தொகையினராய்த் தமிழ்நாட்டிற் போந்து நிலைபெறுதற்கு இடம் பெற்றில ரென்பது தேற்றமேயாம்.

அங்ஙனமாயின், கி.பி. முதல் நூற்றாண்டிற்குப்பின் ஆரியர் தமிழ்நாடு புகுந்து நிலைபெற்றாரெனக் கூறுதல் ஆகாதோவெனின்; ஆகாது-தனிப்பட்ட ஆரியர் காசுமீரத் திலும், அதனையடுத்த சில நாடுகளிலு மன்றிப் பிற இடங் களுக்குப் பெருந்தொகையினராய்ப் போந்திலாமையி னாலும், போந்த சிறு தொகையினருந் திராவிட மக்களுடன் கலந்து திராவிட ஆரியராகித் திராவிட நாகரிகத்தைப் பின்பற்றிச் சிறிது நாகரிகம் பெற்று வடமேற்கில் நாகரிகம் இலராய் உயிர்வாழ்ந்த ஆ ரியரை மிலேச்சரென இகழ்ந்து கழித்தமையினாலும் அங்ஙனங் கழித்து ஒதுக்கப்பட்ட மிலேச்ச ஆரியர் தாம் இருந்த வடமேற்குப் பகுதிகளை விட்டுத் தென்னாட்டிற்கு வர

இயலாதவராயினரென்க.

அடிக்குறிப்பு

1. A.A. Macdonell in his History of Sanscrit Literature p. 160.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/85&oldid=1592809" இலிருந்து மீள்விக்கப்பட்டது