உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

9. தென்னாடு போந்த திராவிட ஆரியர்

என்றாலும்,நடுநாட்டில் திராவிடருடன் கலந்து தோன்றிய திராவிட ஆரியரில் ஒரு சிறு கூட்டத்தாரே மெல்ல மெல்லத் தென்னாடு போந்தவராவர். எங்ஙன மெனிற் கூறுதும், அத் திராவிட ஆரியர் தம்மைப் பார்ப்பன ரென உயர்த்துப் பேசிக் காண்டு, அவ்வுயர்வுக்கு ஒரு பெருந் துணையாகத் திராவிடப் பொதுமக்களுக்குத் தெரியாத ஆரிய மொழியைத் தேவர் களாகிய தமக்குரிய தேவ மொழியாகப் பயின்று, அம்மொழி யில் திராவிட முனிவரால் தொகுத்து வைக்கப்பட்ட இருக்கு எசுர், சாமம், அதர்வம் முதலான வேதங்களை ஓதியும், பழைய மிலேச்ச, ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை கட்குடி யொடு கூடிய வெறியாட்டு வேள்விகளைத் தாம் திராவிட மன்னர்பாற் கரவாய்ப் பெற்ற பெரும் பொருள் கொண்டு ஆயிரக்கணக் காக வேட்டும் வடக்கேயுள்ள நடுநாடுகளில் அருளொழுக்கத் திற்கு மாறான கொடுஞ் செயல்களைப் பரவச்செய்து வந்தனர். அதுகண்டு மனங்குழைந்த தனித் தமிழ் முனிவர் களான கபிலரும் பதஞ்சலியும் முறையே சாங்கியமும் யோகமும் இயற்றி அருளும் அன்புமே இறைவன் குணங்கள், அருளும் அன்பும் உடையாரே இறைவன் றிருவருளைப் பெறுவர், உயிர்க்கொலையுங் கட்குடியும் மக்களை இம்மை மறுமையிலும் நிரயத்திற் செலுத்திப் பிறவி வட்டத்திலும் ஓயாமல் வைத்துச் சுழற்றி வருத்துந் தீவினைகளாமென அறிவுரை கூறி எங்கும் அறிவொளி யினைப் பரவச் செய்வா ராயினர். அவர் காட்டிய அறிவு விளக்கத்தைக் கைப்பற்றிய அஜாதசத்துரு, ஜனகன், பிரவாகனஜைவலி, அசுவபதி கைகேயன் முதலான பழைய தமிழ்த் தவவேந்தர்கள் அப் பார்ப்பனரிள அறியாமையினை அவர்களே ஒப்புக் கொள்ளுமாறு நன்கெடுத்துக் காட்டிப், பின்னர் அவரது வேண்டு கோளுக்கு இரங்கி அவர்க்கு மெய்யறிவு தெருட்டினர். அவர் அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/86&oldid=1592810" இலிருந்து மீள்விக்கப்பட்டது