உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் 31

L

அவர்க்கு மெய்யறிவு தெருட்டிய அறிவுரைகளே ஈச, கேந, கட, பிரசின, முண்டக, மாண்டூக்ய, சாந்தோக்ய, பிருக தாரணியக, தைத்திரீய, சுவேதாசுவதரம் முதலான உபநிடதங்களாக இயற்றப் பட்டன. இவ்வரலாறுகளெல்லாம் அவ்வுபநிடதங் களிலேயே சொல்லப் பட்டிருக்கின்றன.

அதன்பிற் சைவசமயத்திற் பிறந்து பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாகிய சிவபிரானையே அரு ளொழுக்கத்தில் நின்று வழிபட்டு வந்த தாய் தந்தையர்க்கு அருமைப் புதல்வராய்த் தோன்றி, முதன் முதல் அத்தாய் தந்தையராற் சிவபிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்று ஏற்பிக்கப்பட்டவராகப் பழைய கல்வெட்டு ஒன்றிற் குறித்துச் சொல்லப்படுங் கௌதம புத்தர் என்பார் தமது அரச வாழ்வினையுந் துறந்து, ஆரூயிர்கட்கு அருளுரை பகரும் அருள் வாழ்வினையே மேற்கொண்டு, திராவிட ஆரியப் பார்ப்பனர் வேட்டுவந்த உயிர்க்கொலை வேள்வி கள் நடைபெற வொட்டாமற் றடைசெய்து, எங்கும் அருளொழுக்க வொளியினையே விரைந்து பரவச் செய்தனர். அதனால், அப்பார்ப்பனக் குழுவினர் வடநாட்டில் அங்குள்ள மக்களை ஏய்த்துப் பிழைக்கும்வழி அடைபட்டு மெல்ல மெல்லத் தென்னாடு நோக்கி வரத் துவங்கினார் கௌதம் புத்தராற் பரவிய அருட்பெருங் கொள்கை அவர் பெயராற் புத்தசமயம் எனப் பெயர் பெறலாயிற்று. புத்தர்க்குப் பின் அவ்வருட் பெருங்கொள்கையை இவ்விந்திய நாட்டிலும் இதற்குப் புறம்பேயுள்ள நாடுகளிலும் பரவச் செய்த அருளாளன் அசோக வேந்தனே யாவன்; இவ்வேந்தனுஞ் சிவபிரானையே வழிபட்டவன் என்பது வின்சண்ட் ஸ்மித் என்னும் வரலாற்று நூலாசிரியர் கூறுதலாற் பெறப்படுத லாலும் இவனும் பண்டைத் தமிழர்க்குரிய அருட்பெருங் கொள்கையினையே வட நாடுகளிலும் பிற நாடுகளிலும் பெரிதும் பரவச் செய்தான் என்க.' இவ் வேந்தன் காலத்தே தான், வடக்கே நடுநாட்டி லிருந்த பார்ப்பனர் தொகுதி தொகுதி யாய்த் தென்னாடு புகுந்து குடியேறினரென்பது அறியப்படும். இங்ஙனங் குடியேறிய பார்ப்பனருந் திராவிட ஆரியக் கலப்பிற் பிறந்தவரேயன்றி இவருந் தனிப்பட்ட ஆரியர் அல்லரென்று துணிந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/87&oldid=1592811" இலிருந்து மீள்விக்கப்பட்டது