உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

64

மறைமலையம் - 31

பார்ப்பன வகுப்பைப் பண்டிருந்து ஆராய்ந்து பார்த்தால், அதில் ஒருவகுப்பினரன்றிப் பல்வேறு வகுப்பினர் கலப்பும் ஊடுருவி யிருத்தலை எளிதில் அறிந்து கொள்ளலாம். இஞ்ஞான்றைப் பார்ப்பனர் அனைவரும் ஆரிய மொழியைத் தமக்கே உரிய மொழியாகப் பயின்று, அவ்வாற்றால் தம்மைத் திராவிட மக்களினின்றும் வேறு பிரித்துக்கொண்ட தம்மை “ஆரியர்” என வழங்கிக் கொண்டாலும், அவருடம்பினுள் ளோடுவது பெரும் பாலுந் திராவிட இரத்தமேயன்றிப் பிறிதில்லை. ஆகவே, இவ்விந்திய நாட்டின் வடமேற்கு மூலையைத் தவிர, மற்றை அதன் நான்கெல்லைக்குட் பண்டைக் காலம் முதல் இன்றுகாறும் பரவி நிறைந்திருப்பவர் தமிழரும் அவர் இனத்தவரான திராவிட மக்களுமேயன்றி வேறு பிறர் பெரும்பாலும் இலர் என்பது தேற்றமேயாம் என்க.

அடிக்குறிப்பு

1. See Vincent Smith's The Early History of India, P.176.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/89&oldid=1592813" இலிருந்து மீள்விக்கப்பட்டது