உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

10. மதம் இன்னதென்பது

இங்ஙனமாக இமயம் முதற் குமரிவரையிற் பண்டும் இன்றும் பரவியிருப்பவர் பெரும்பாலுந் தமிழரும் அவ ரினத்தைச் சேர்ந்த திராவிடருமே யென்பது பெறப்படுதலால், இனி அம்மக்களின் மதம் பண்டும் இன்றும் எத் தன்மையதாய் இருந்தது இருக்கின்றது. இனி எதிர்காலத்தே அஃதெவ்வாறு இருக்குமென்பது ஆராயற் பாற்று. அவ்வியல்புகளை ஆராயும் முன் ‘மதம்’ என்னுஞ் சொற் பொருளும் அதன் வழக்கும் ஆராய்ந்து காண்பது இன்றியமையாததாய் இருக்கின்றது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல் களில் மட்டுமே ‘மதம்' என்னுஞ் சொற், கடவுளைப்பற்றி யாதல் உயிரைப் பற்றியாதல் உலகத்தைப் பற்றியாதல் ஒழுக்கத்தைப் பற்றியாதல் மக்கட் குழுவினர் கொண்ட கொள்கைக்கும் பெயராய்த் தமிழ் நூல்களில் வழங்கப்பட்டு வருகின்றது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு அஃதாவது இற்றைக்கு ஆயிரத்தெழு நூறு ஆண்டுகட்கு முற்பட்ட நூல்களில் ‘மதம்’ என்னுஞ் சொற் கொள்கை யென்னும் பொருளில் வருதலைக் காண்கிலேம். புறநானூறு, பரிபாடல், பத்துப்பாட்டு முதலான பழைய இலக்கியங் களில் ‘மதம்' என்னுஞ் சொல் வலிமை, செருக்கு, அறியாமை, அழகு முதலான பொருள்களில் வருகிறதே யன்றிக் கொள்கை யென்னும் பொருளில் வரவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதான மணி மேகலையிலுங் கூடச் ‘சமயம்’ என்னுஞ்சொல் வந்திருக்கின்றதேயன்றி, அதற்கு ஈடான ‘மதம்' என்னுஞ் சொல் வரவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பாதியிற் றோன்றிய மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவாசக காலத்திலிருந்துதான் ‘மதம்’ என்னுஞ் சொல் கொள்கை யென்னும் பொருளில் இன்றுகாறும் வழங்கி வருகின்றது. இடைப்பட்ட காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/90&oldid=1592814" இலிருந்து மீள்விக்கப்பட்டது