உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • மறைமலையம் - 31

தெழுந்த 'நன்னூல்' முதலான இலக்கண நூல்களும் ‘மதம்’ என்னுஞ் சொல்லைக் கொள்கை யென்னும் பொருளில் வழங்கி வருதல் “எழுவகை மதமே யுடம்படல் மறுத்தல்” என்னும் நன்னூற் சூத்திரத்தால் அறியப்படும். ஆனாற், பண்டைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலோ 'மதம்' என்னுஞ் சொல்லாதல் ‘சமயம்' என்னுஞ் சொல்லாதல் எவ்விடத்துங் காணப்படவே யில்லை. இதுகொண்டு பல்வகை மதங்களும் இத் தமிழ் நாட்டிற் றோன்றுதற்கு முன்னமே தொல்காப்பியம் இயற்றப்பட்டமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நன்கு விளங்காநிற்கும்; அங்ஙனமே மணிமேகலை காலத்திற்கு அஃதாவது ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட எந்தத் தமிழ் இலக்கியத் திலுஞ் ‘சமயம்’, ‘மதம்' என்னுஞ் சொற்கள் வழங்காமையை உற்றுநோக்குங்கால், ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னே இத்தென்றமிழ் நாட்டின்கண்ணே பல்வகைச் சமயப் பகுப்புகள் பல்வகை மதவேறுபாடுகள் இருந்திலாமை தெற்றென விளங்கா நிற்கும்.

6

மற்றும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முன்னில்லாத சமயப் பகுப்புகளும் மத மாறுபாடுகளும் த்தென்றமிழ் நாட்டிற் றோன்றித் தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து, அவரை ஒருவரோ டொருவர் மாறுபடச் செய்து அலைக்கழிக்கலானமை, மாணிக்க வாசகப் பெருமான்,

“தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும், ஆறு கோடி மாயா சத்திகள்

வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின: ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்

சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்: விரத மேபர மாக வேதியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர், சமயவாதிகள் தத்தம் மதங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/91&oldid=1592816" இலிருந்து மீள்விக்கப்பட்டது