உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

அமைவ தாக அரற்றி மலைந்தனர்:

மிண்டிய மாயா வாத மென்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிட மெய்தி

அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்

67

என்று அருளிச் செய்த போற்றித் திருவகவற் பகுதியால் நன்கு புலனாகின்றதன்றோ? கடவுளும் உயிரும் இல்லையெனப் பாழ்ங்கொள்கை பேசும் நாத்திகரும்; வேள்வியாற்றுதல் பட்டினி கிடத்தல் முதலான வினைகளே ஒரு வாக்கு வீட்டின்பத்தைத் தரும்: இவற்றின் வேறாகக் கடவுள் ஒருவன் உளனெனக் கொண்டு அவனை வழிபடுதலும் பிறவும் வீணேயாமெனக்கரையும் மீமாஞ்சகரும், உயிருங் கடவுளு மெல்லாம் பொய், அறமே மெய்யெனக் கழறும் பௌத்தரும், இவ்வுடம்போடிருந்து உலக இன்பங்களை நுகருதல் விடுத்துக்

L

வுளும் உயிரும் இருவினையும் மறுமையும் மறுபிறப்பும் உளவெனக் கொண்டு உழன்று உடம்பை மாய்த்தல் அறியாமை யேயாம் எனக் கூவும் உலோகாயதரும், இவரின் இன்னும் பலவேறு வகையான சமயவாதிகளும் மாணிக்கவாசகர் காலத்தும் அவர்க்கும் முற்பட்ட மணிமேகலை ஆசிரியரான கூல வாணிகன் சாத்தனார் காலத்தும் இத்தமிழ் நாட்டின்கண் வந்து பல்கிவிட்டமை மேற்காட்டிய மாணிக்கவாசகர்

திருமொழியாலும், மணிமேகலையிற் 'சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை’யாலும் நன்குணரப் படும்.

கௌதம புத்தர் காலத்திருந்து வடநாட்டுப் பார்ப்பனர் தென்றமிழ் நாடு புகுந்து சோழ பாண்டிய அரசர்களைத் தம்வயப்படுத்தி, அவருதவியாற் பல வேள்விகள் வேட்டு ஆரியச் சிறுதெய்வ வெறியாட்டு வேள்வியை இந்நாட்டிற் பரப்ப முயன்றன ராயினும், அருளொழுக்கத்திலும் ஒரு முழுமுதற் கடவுள் வழி பாட்டிலும் உறைத்து நின்ற வேளாண் மாந்தர்க்கும் அவரையே பெரிதுஞ் சார்ந்த ஏனைத் தமிழ்ப் பொதுமக்கட்கும் ஆரிய வேள்வி இசையாமையின் அஃதிங்கு வேரூன்றாமலே ஒழிந்து போயிற்று. ஆகவே, ஆரிய மதம் என ஆ ஒன்று இத்தமிழ்நாட்டில் நிலை பெறாதொழியினும், இங்குவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/92&oldid=1592817" இலிருந்து மீள்விக்கப்பட்டது