உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் - 31

வடநாட்டுப் பார்ப்பனர் தமிழ்ப் பொது மக்களுடன் கலந்து தமிழ்மொழியை நன்கு பயின்று அதில் வல்ல நல்லிசைப் புலவர்களாயுந் தமிழ்த் தெய்வமாகிய சிவபிரானையே வணங்கித் தமிழ் மேன்மக்கள் கொள்கையின் பாலராயும் மாறிவிட்டமையின் ஆரியமதம் தமிழர்மதம் என ருவேறு

மதங்கள் தோன்றுதற்கு இடமில்லாதொழியினும், வடநாட்டுப் பார்ப்பனரைத் தொடர்ந்து இத்தமிழ்நாடு போந்து நிலை பெற்ற பெளத்தர் சமணர்களாலேதாம் இங்கே பல வேறு மதங்களும் மதவழக்குகளுங் கிளைக்கலாயினவென்று அறிதல் வேண்டும். அசோக வேந்தன் காலத்திருந்து கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சிறிதேறக்குறைய முந்நூறாண்டு களாக இங்கு வந்து அமைதியாய் வாழ்ந்த பௌத்த சமணர்கள், சோழ பாண்டிய அரசு நிலைகுலையலான கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதற் றமிழ்நாட்டின் மேற்படை யெடுத்துவந்த கருநட மன்னரின் துணை கொண்டு, தஞ் சமயக் கொள்கைகளை இந்நாட்டின்கட் பரப்ப மிக முயன்று, தங் கொள்கைகளுக்கு இணங்காத தமிழ் மக்களையெல்லாந் தம் மதங்களிற் றிருப்புதற்குப் பல தீய முறைகளை யெல்லாங் கையாள்வா ராயினர்.

ளத்த

சமண

இதனாற், றமிழாசிரியர்க்கும், சமயத்தார்க்கும் இடையே வழக்குகளும் எதிர் வழக்குகளும் அடுத்தடுத்து நிகழலானமையின், ஒருசார் கொள்கையினை யுடையார் பிறிதொருசார் கொள்கையினை யுடை யாரினின்று தம்மை வேறு பிரித்துக் வழங்குதற்கும் பிறரைத் தம்மினின்று வேறு பிரித்து காட்டுதற்குஞ், சைவரென்றும் வைணவரென்றும் பௌத்தரென்றுஞ் சமணரென்றும் உலகாயதரென்றும் மாயாவாதிகளென்றும் வெவ்வேறு குழுவினர்க்கு வெவ்வேறு சமயப்பெயர்கள் கொடுத்து வழங்குவாராயினர். சமயம் மதம் என்ற பெயரும் அப் பெயராற் குறிக்கப்படுங் கொள்கைகளும் இல்லாமல், எல்லாம் ஒரே கொள்கையினராய் அமைதியாய் எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளை வணங்கிக்கொண்டு இனி துயிர் வாழ்ந்த தமிழ் மக்களிடையே, வடக்கிருந்து வந்து நிலைபெற்ற பௌத்த சமண சமயத்தவராலும், அவர்க்குப் பின்வந்த குழுவினராலுமே பல்வேறு மதங்களும் மதப் போர்களும் இந்நாட்டின்கண் மேன்மேற் கிளைத்து

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/93&oldid=1592818" இலிருந்து மீள்விக்கப்பட்டது