உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

69

வரலாயினவென் றுணர்ந்து காள்ளல் வேண்டும். இவ்வாறுண்டான பலவேறு மதங்களும் வடக்கிருந்து வந்த வராலேதாம் பல்கின வென்பதற்கு, அம் மதங்கள் பலவும் வடமொழிப் பெயர்கொண்டு உலவுதலும், அம்மதங்களைப் பற்றிய நூல்களெல்லாம் வடமொழி யிலேயே வரையப் பட்டிருத்தலுமே உறுபெருஞ் சான்றாம் என்க. இதனை நன்குணர்ந்தே சுவாமி விவேகாநந்தரும் மதச்சண்டைகளுஞ் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் இருப்பதும் ஸமஸ்கிருத மொழியே யாகும் என்றும், ஸமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப் போராட்டங்களுந் தொலைந்து போகுமென்றும் வருந்திக் கூறினார். பழைய தமிழ் நூல்களிற் சமயப் போருக்காவது சாதிச் சண்டைக்காவது சிறிதும் இடம் இல்லாதிருத்தலை அவற்றைப் பயில்வோர் நன்குணர்வர். ங்ஙனம், மதம் என்னுஞ் சொல்லும், அச்சொல்லில் அடங்கிய ஒன்றோ டொன் றொவ்வாக் கொள்கைகளும் வடக்கிருந்து வந்து இத் தமிழ்நாட்டிற் குடியேறிய மாந்தர்களால் உண்டாயின வேயல்லாமல், அவை தமிழ் நாட்டுத் தமிழ் மக்களால் உண்டாயின வல்லவென்பதை அறிஞர்கள் கருத்திற் பதித்துக் கொள்ளல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/94&oldid=1592819" இலிருந்து மீள்விக்கப்பட்டது