உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

71

இந்நிலத்திலிருந்து வாழ்தற்கு ஓர் உடம்பும், இந்நிலத்தின் கண் உள்ள நுகர்பொருள்களை நுகர்தற்கு ஏற்ற மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக் கருவிகளும், மனம் நினைவு அறிவு முனைப்பு என்னும் அகக் கருவிகளும் பிறவும் நமக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இக்கருவிகளுள் ஒன்றாயினும் பலவாயினுங் குறைவுபடுமாயின், மக்கள் என்போர் அறிவும் இன்பமும் பெறுதல் சிறிதும் இயலாது. கண்ணில்லாத ஒருவன் இந் நிலவுலகத்தியற்கைக் காட்சிகளை எங்ஙனங் காணமாட்டுவான்? செவியில்லாத ஒருவன் சான்றோர் கூறும் அரும் பொருள் உரைகளை எங்ஙனங் கேட்க மாட்டுவான்? நாவில்லாத ஒருவன் பிறரோடு எங்ஙனம் உரையாட மாட்டுவான்? இங்ஙனமே ஏனை அகக்கருவி புறக் கருவிகளை குறைபட்டவ ரெல்லாரும் இவ்வுலகியற் பொருள் களை உணர்தலும் அறிதலும் நுகர்தலுஞ் சிறிதும் ஏலாவென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததேயாகும் என்க.

வ்வாறு நமக்கு அறிவு விளங்கி இவற்றை அறிதற்கும் நுகர்தற்கும் முன்னமே, இவ்வுலகத்தையும் இவ்வுடம் பையும் நமக்குப் படைத்துக் கொடுக்கும்படி நாம் எவரை யேனுங் கேட்டதுண்டா? சிறிதும் இல்லையே. ஏன்? இப்பிறவிக்கு வரும்முன் நமக்கு அறிவு சிறிதுமே விளங்க வில்லை யாதலால் அறிவில்லா அந்நிலையில் அவைகளை நமக்குப் படைத்துக் கொடுக்கும்படி கேட்டால் நம்மாற் சிறிதும் இயலாதாகலின் என்க. இங்ஙனம், நாம் கேளா மலிருக்கவும், நமக்குப் படைத்துக் கொடுக்கப்பட்ட இவைகளை நாம் வேண்டாமென்றுதான் கழித்து விடுதல் இயலுமோ வெனின், அதுவுஞ் சிறிதும் இயலாதன்றோ? இன்னும் ஆணாய்ப் படைக்கப் பட்டவர் ஆணாயிருந்தே தீரல் வேண்டும். பெண்ணாய்ப் படைக்கப் பட்டவர் பெண்ணாயிருந்தே தீரல்வேண்டும். அங்ஙனமே, நாம் பிறப்பிக்கப்படுங்காற் பிறந்தேயாகல் வேண்டும்; இறப்பிக் கப் படுங்கால் இறந்தே போகல் வேண்டும். இவை களை மாற்றி டுதல் எவராலும் ஆகாது. இவ் வுலகமும் உடம்பும் பொய் யென்று சொல்லிவிட்டால் இவை யெல்லாம் பொய்யாய் விடும் என்று சிலர் சொல்லு கிறார்கள்.

ஆனால், அங்ஙனஞ் சொல்லியவர் அடுத்த நேரத்திலேயே பசியும் விடாயும் வந்துவிட்டால் அவற்றைப் போக்குஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/96&oldid=1592821" இலிருந்து மீள்விக்கப்பட்டது