உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

73

தமது முன்னாளி லெல்லாம் இவை தம்மை வெறுத்துப் பாடிய மாணிக்கவாசகப் பெருமானே தமது பின்னாளில்,

“நாயிற் கடையாம் நாயேனை

நயந்து நீயே யாட்கொண்டாய்,

மாயப் பிறவி யுன்வசமே

வைத்திட் டிருக்கு மதுவன்றி ஆயக் கடவேன் நானோதான்?

என்னதோஇங் கதிகாரம்?

காயத் திடுவாய் உன்னுடைய

கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே”

என அவ்வாறு தாஞ்செய்தது பிசகென உணர்ந்து உண்மையை

ஒளியாமலே

எடுத்திசைத்தார்.

ங்ஙனமே

ஆசிரியர்

திருமூலரும்,

“உடம்பா ரழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே”

என்றும்,

“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே”

என்றும் இருகால் அருளிச் செய்தார்.

இம் மேலோர் உரைகளைக் கருதிப் பார்க்குங்கால், உலகையும், உடம்பையும் வெறுத்துப் பேசும் பேச்சு வெறுஞ் சொல்லளவாகவே முடிகின்றதன்றி, உண்மையில் அவை தம்மை எவரும் வெறுப்பதாயில்லை; எல்லாரும் அவற்றின் சேர்க்கையை மிக விரும்புகின்றவர்களாயும் அச் சேர்க்கையை என்றும் நிலை பெறுத்திக் கொள்வதில் அடங்கா வேட்கை யுடையவர்களாயுமே இருக்கின்றனர். கட்பார்வை மழுங்கிச் ருக்கின்றனர்.கட்பார்வை செவியுங் கேளாமற் கைகால் வழங்குதலும் இல்லையாகிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/98&oldid=1592823" இலிருந்து மீள்விக்கப்பட்டது