உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்

கோன்மணக்க விழிகாட்டிக் குடிமணக்க வழிகாட்டிக்

குவலயத்தைக் காப்ப தற்குக்

கொடிதாங்கி வந்தவனே! இடிதாங்கி நொந்தவனே! கொத்துமலர் ஆன செல்வா!

தேன்மணக்கும் கருங்குவளை! திருமணக்கும் நறுந்துளவம்! சிறுபறை முழக்கி அருளே!

தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி

3) சிறுபறை முழக்கி அருளே!

66

அக்கால நக்கீரர் பிற்காலச் சிவஞான

அருமுனியும் ஒருவ ராகி

அழகான தமிழ்ச்சங்க நூல்எல்லாம் ஊர்ஊராய் அறிவோடு பரப்பி வந்து

மெய்க்காதல் தமிழ்மீது கொண்டாடி வானத்தின் மீதூரும் திங்க ளாகி

மேலான திருஞான சம்பந்தப் பெருமானின் மேன்மையை எடுத்து ரைத்துத்

தக்கார்கள் பலர்தோன்ற முக்கால வித்திட்ட தகுதியை எண்ணி எண்ணித்

தலையாய திரு.வி.க.நிலையாகப் பாராட்டித் தமிழினால் தொண்ட னாகத்

தெக்காணப் புலவனொரு பொற்கால மறைமலையே! சிறுபறை முழக்கி அருளே!

தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி

4) சிறுபறை முழக்கி அருளே!

75

ஆட்சியாளர் சிறக்க விழிகாட்டியும் குடிமக்கள் சிறக்க வழிகாட்டியும் காத்தவர் அடிகள். எதிர்ப்பாளர்களின்

இடிகளைத் தாங்கி நொந்தார்.

"நக்கீரரும் சிவஞான முனிவரும் கலந்த உருவே அடிகள். சங்க நூல்களைப் பரப்பினார். தமிழ்வானில் திங்கள் போல் திகழ்ந்தார். சம்பந்தப் பெருமானின் புகழ் பரப்பினார். அறிஞர் பலர் தோன்ற வழிகாட்டினார்” என்று திரு.வி.க. மறைமலை அடிகளைப் பாராட்டி அவரது தொண்டர் ஆனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/100&oldid=1594989" இலிருந்து மீள்விக்கப்பட்டது