உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் - 34

கோசரினக் கொள்கையெனத் தேசமெலாம் ஒருமொழியாம்

கோட்பாடு பாவு தற்குக்

கோபுரமாய் நின்றவனே! கொள்கைவழி சென்றவனே! கோலங்கள் இட்ட கோவே!

ஆசைவழி காட்டாமல் அறிவுவழி காட்டியதால்

ஆங்கிலமும் கற்ற தோடே

அன்னைமொழி நற்றமிழும் அழகுமிகு வடமொழியும் ஆராய்ந்து கற்ற ஐயா!

நேசமொரு சென்னையிலும் வாசமொரு திண்ணையிலும் நினைவெல்லாம் தமிழு மாகி

நிகழ்காலம் வருங்காலம் நீண்டதொரு நெடுங்காலம் நிலைத்தபுகழ் ஈட்ட வந்தோய்!

தேசமெலாம் சென்றவனே! பாசமெலாம் வென்றவனே! சிறுபறை முழக்கி அருளே!

தென்றலென மன்றலொம் நின்றுலவு சைவமுனி

2) சிறுபறை முழக்கி அருளே!

வான்மணக்கும் கற்பகமே! வயல்மணக்கும் நெற்கதிரே! வாழ்வாங்கு வாழும் தேவே!

வண்டமிழின் தீஞ்சுவையே! வளர்ந்துவரும் செஞ்சாலி வைகையெனப் பொங்கும் ஆறே!

கான்மணக்கும் மலர்க்கொத்தே! கலைமணக்கும் தமிழ்வித்தே! கவிமணக்கும் பத்துப் பாட்டே!

கத்துகடல் அத்தனையும் மொத்தமெனத் திரண்டொருபால் காட்சிதரும் புலமை ஊற்றே!

சங்க காலத்தில் வாழ்ந்த “கோசகர்” என்னும் இனத்தார் ஒன்றே மொழியும் உரவோர் ஆவர். உண்மையே பேசுவர். அதுபோல் அடிகள் தமிழகம் முழுதும் ஒரே மொழியாகிய தனித்தமிழ் பரவ விரும்பினார்.

அவர் சென்னையில் ஒரு திண்ணையில் வாழ்ந்தாலும் அவரது நினைவு தமிழில் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/99&oldid=1594988" இலிருந்து மீள்விக்கப்பட்டது