உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

9. சிறுபறைப் பருவம்

காயமிது பொய்யெனவே காற்றடைத்த பையெனவே

கண்டதொரு கால முண்டு

கண்ணான உள்ளங்கள் புண்ணான பொல்லாங்கு

காலத்தில் நேர்ந்த துண்டு.

மாயமொடு மந்திரமும் சாயமொடு தந்திரமும்

மயக்கங்கள் தந்த துண்டு.

மதிமாறி உலகத்தின் கதிமாறிக் கவர்ச்சியினால் மாந்தர்கள் பிறழ்ந்த துண்டு.

தாயமொடு சொத்துரிமை காயமொடு வழக்குகளைத்

தாரணியில் தந்த துண்டு.

தலைமகனாய் வந்துதமிழ் நிலைஉயரச் செய்தவனே!

தமிழர்க்குப் புதியவழி காட்டி!

தேயமெலாம் கண்டவனே! ஆய தமிழ் கொண்டவனே! சிறுபறை முழக்கி அருளே!

தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி! 1) சிறுபறை முழக்கி அருளே!

உட

லை வெறுத்தல், உயர்ந்தோரைப் பழித்தல், மந்திர தந்திரங்கள், கவர்ச்சிகள், மதிமயக்கல், சொத்துரிமையால் வழக்குகள், போராட்டம் நிகழ்தல் முதலிய தீங்குகள் மனித வாழ்வில் நிறைந்தபோது அடிகள் நல்வழி காட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/98&oldid=1594987" இலிருந்து மீள்விக்கப்பட்டது