உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் பழியும் பாவமெதும் வாராமல் வாழ்க்கையிலே

பக்குவமாய் வாழ்க என்றும்

பண்பட்ட தமிழிசையே பிறநாட்டின் இசைகட்குப் பாதையினை அமைத்த தென்றும்

தெளிவாய் அறைந்தவனே! தீந்தமிழில் நிறைந்தவனே! சிறுபறை முழக்கி அருளே!

தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி

6 சிறுபறை முழக்கி அருளே!

ஊரார்கள் அழைத்தாலும் உரையாற்றப் போமுன்னே உள்ளத்தில் உள்ள தான

உலகத்து வசதிகளைக் கடிதத்தில் எழுதியதும் ஒப்பற்ற இலக்கி யம்மே!

சோறாக்கப் புழுங்கரிசி, பருப்புவகை, சவ்வரிசி,

சுவைமிக்க கொத்த மல்லி,

சோம்போடு, சீரகமும், பெருங்காயம் திராட்சையுடன் சுவையான வெள்ளைப் பூண்டும்

ஈரானின் வாதுமையும், சீனாவின் கற்கண்டும்

இனிமைமிகு சர்க்க ரையும்

ஏற்புடைய பசும்பாலும், தயிர்நெய்யும் வெந்நீரும்,

இலைக்கோசும், பச்சைக் காயும்,

சீரான தனிவீடும், பணியாளும் கேட்டவனே!

சிறுபறை முழக்கி அருளே!

தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி

7) சிறுபறை முழக்கி அருளே!

77

மேற்கண்ட பாடலில் அடிகளின் பொன்மொழிகள் பல

உள்ளன.

சொற்பொழிவுக்குப் புறப்படுமுன் மேற்கண்ட தேவைகளை விரிவாகக் கடிதம் மூலம் எழுதி அனுப்புவது அடிகளின் வழக்கம். வாதுமை = வாதுமைக் கொட்டை

பச்சைக் காய் = பச்சைக் காய்கறிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/102&oldid=1594991" இலிருந்து மீள்விக்கப்பட்டது