உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் - 34

பொழிவாற்றும் இடம்பற்றி மேடையமைப் பத்தனையும்

பொருத்தமுறப் படம்வ ரைந்து

பொல்லாப்பை எண்ணாமல் முன்கூட்டி அறிவித்துப் புகழீட்ட வந்த பொன்னே!

வழியுள்ள இடத்தினிலே வளமான பந்தலிலே

வளர்காற்று வருவ தற்கு

வகையான சாளரமும், காற்றாடி அமைப்புகளும் வரம்போடு பொருத்து கென்றும்

விழிப்போடு காலைமணி எட்டரைக்குத் தேவாரம்

வாசகமும் இசைக்க என்றும்

விரிவுரையை ஒன்பதுக்குத் தொடங்கியபின் பன்னிரண்டில் வீட்டுக்குச் செல்க என்றும்

தெளிவாக வரன்முறைகள் அவைமுறைகள் தெரிவித்தோய்!

8)

சிறுபறை முழக்கி அருளே!

தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி

சிறுபறை முழக்கி அருளே!

கருவுற்ற காலத்தில் திருஞான சம்பந்தர்க

கதையினைப் பயில்க என்றும்

கருத்துள்ள சொற்பொழிவு கவிதையுடன் தேவாரம்

கருத்தூன்றிக் கேட்க என்றும்

துருதுருவென் றோயாமல் சோம்பேறி ஆகாமல்

தொழிலாற்ற முயல்க என்றும்

துணையான இறையன்பில் தோய்ந்தாலே பெண்கட்குத் துயரின்றிக் கருவு யிர்க்கும்

விரிவுரை நிகழ்த்தும்

மேடை அமைப்புப் பற்றி

முன்கூட்டியே படம் வரைந்து அனுப்புவது அடிகளின் வழக்கம். காலை 8-30 மணிக்குத் தேவார திருவாசகம் பாடல்; 9 மணிக்கு விரிவுரை தொடங்கல். 12 மணிக்கு முடித்தல் என்பது அடிகளின் திட்டமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/103&oldid=1594992" இலிருந்து மீள்விக்கப்பட்டது