உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் உருவாகும் பெண்ஆனால் மங்கையர்க்கே அரசிஅது! ஒப்பற்ற ஆணே ஆனால்

உயர்ஞான சம்பந்தப் பெருமானே எனவாழ்த்தி உலகிற்கு வழிகள் காட்டித்

திருவருளைப் பெறவைத்த குருவருளே! மறைமலையே! சிறுபறை முழக்கி அருளே!

தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி! சிறுபறை முழக்கி அருளே!

9)

வள்ளலெனும் இராமலிங்கப் பெருமானின் அருட்பாவில் வளமாகத் தோய்ந்த தாலே

வற்றாத இன்னிசையால் நாடோறும் இசைபாடி வையத்தார்க் கருள்பா லித்துக்

கள்ளமிலாக் கதிரைவேற் பிள்ளையெனும் பெரும்புலமைக் கற்பகத்தைத் திட்ட மிட்டுக்

கத்தியினால் குத்திடவே புத்தியிலார் எண்ணியதைக் காலத்தால் அறித்து நீக்கிப்

பிள்ளையினைக் காத்ததனால் ஈழத்தார் பேரன்பைப்

பெருமையுடன் பெற்ற செல்வா!

பெரும்புலவர் திரு.வி.க. அரசியலில் துழைந்ததனைப் பிழையென்று கடிந்த வீரா!

தெள்ளரிய தமிழமுதே! தேன்மொழியும் தாமரையே! சிறுபறை முழக்கி அருளே!

தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி

10) சிறுபறை முழக்கி அருளே!

79

கருவுற்ற பெண்கள் எப்படி நடக்க வேண்டும் என்று வழிகாட்டினார் அடிகள்.

திருவருட்பாவில் மூழ்கியவர் அடிகள்.

இலங்கைப் புலவர் கதிரைவேற் பிள்ளை அவர்கட்குத் தீங்கு வராமல் காத்தவர் அடிகள்.

திரு.வி.கஅவர்கள் அரசியலில் நுழைந்ததைக் கண்டித்தவர் அடிகள். அதனைத் திரு.வி.க.அவர்களே பாராட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/104&oldid=1594993" இலிருந்து மீள்விக்கப்பட்டது