உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

10. சிறுதேர்ப் பருவம்

நீராடை உலகத்தில் துவராடை பூண்டாலும்

நெஞ்சிலே தமிழை ஏந்தி

நெற்றிக்கண் திறந்தாலும் குற்றங்கள் குற்றமென நேர்மையாய் உரைத்த தாலே

தூரோடு பகைநீக்கி வேரோடு களைநீக்கித்

தூயதாய்த் தமிழை ஆக்கித்

தொல்லைகள் தாங்கியே பிள்ளைகள் ஓங்கவே

தொண்டினைச் செய்த வள்ளல்!

நாரோடு மலர்போலத் தேரோடு மணிபோல

நதியோடு மீனும் ஆனோய்!

நகைஎட்டு சுவைகாட்டித் தொகைஎட்டு மொழிகாட்டி

நலம்பூத்து நின்ற நாவால்

சீரோடு நின்றவனே! பாரோடு வென்றவனே!

சிறுதேர் உருட்டி அருளே!

தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே!

1) சிறுதேர் உருட்டி அருளே!

துவராடை = காவி ஆடை

அடிகளின் நாவில் நகை முதல் எட்டுச் சுவையும்,

எட்டுத்தொகையும் தவழும்.

பல்லாவரத்தில் அம்பலவாணர் கோயிலை அமைத்ததன் மூலம் அடிகள் மற்றொரு மணிவாசகர் ஆனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/105&oldid=1594994" இலிருந்து மீள்விக்கப்பட்டது