உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் -34 *

-

“மாதரும் பகுத்துணர் வாற்றலும்’

9910

மடமையை ஒழிக்க வந்தோய்!

மாண்புடைக் “கூட்டுவா ணிகத்துடன்”11 “பெண்மக்கள் கடமையும்”12 எழுதி வைத்தோய்!

66

“சீவகா ருண்யமாம்’”13 கட்டுரை வரைந்தவா!

சிறுதேர் உருட்டி அருளே!

தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே!

3) சிறுதேர் உருட்டி அருளே!

உடம்பெடுத்துப் பயனென்ன? உலகத்து வாழ்க்கையிலே உயர்வான “தமிழ நாட்டார்

ஒப்பற்ற மேல்நாட்டார்” செயலுடனே ஒப்பிட்டே உண்மைகள் தெரிய வைத்தோய்!

கடமையென மேல்நாட்டார் கல்வியுடன் ஆராய்ச்சி கருதரிய சேவை செய்யக்

கலைத்தமிழர் தமக்குள்ளே தலைச்சாதி கடைச்சாதி கற்பனையால் சண்டை போட்டு

மடமையினால் வழக்காடி உடமையெலாம் இழந்தாலும் மதியேதும் கொள்வ தின்றி

மாறாத சடங்காலும் ஆறாத பிணியாலும் வாழ்க்கையில் அமைதி நீங்கித்

திடமின்றி அலைதீமை தெளிவாகக் காட்டியவா! சிறுதேர் உருட்டி அருளே!

தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே!

4) சிறுதேர் உருட்டி அருளே!

அடிகள் எழுதிய “அறிவுரைக் கொத்து” எனும் நூலில் மேற்கண்ட 1முதல் 13 தலைப்புக் கட்டுரைகள் உள்ளன.

66

‘அறிவுரைக் கொத்து” நூலில் அடிகள் “தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும்” என்ற தலைப்புக் கட்டுரையில் மேற்கண்ட கருத்துக்களைக் கூறி உள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/107&oldid=1594996" இலிருந்து மீள்விக்கப்பட்டது