உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

பிள்ளையார் வணக்ம் (ஆசிரிய விருத்தம்)

பார்கொண்ட வுயிரினம் பல்கோடி வாழ்வுறப்

பரிவோடு காத்துவிண்ணேர்

பரவித் துதித்திடப் பாரதப் பெருங்கதை பழமலையிற் றீட்டிவைத்துப்

பேர்கொண்ட பனிமலைப் பெம்மானின் பிள்ளையாய்ப்

பெரும்பேறு பெற்றவேழம்

பெரிதும் மனத்துளே வைத்துருகும் பிள்ளையைப்

பிரியமுடன் வந்துகாக்க,

சீர்கொண்ட தமிழ்நலம் சிந்தையிற் கொண்டருட்

சிறப்போடு முற்றுமாய்ந்து

தெளிந்தே தனித்தமிழ்ச் செப்பமும் செய்துலகு

திறம்புரிய வைத்தசெம்மல்

தார்கொண்ட சிவனருள் தாள்போற்றி யில்லறம்

தரணிமேல் வாழ்ந்தமேலோன்

தகைசேர் மறைமலை யடிகள்மேற் பிள்ளையைத்

தமிழ்பாட அருளுமீந்தே.

1. இந்நூலாசிரியர் கவிஞர் அன்பானந்தம் தம்மைப் பிள்ளையென அடக்கமாகக் கூறிக் கொள்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/138&oldid=1595027" இலிருந்து மீள்விக்கப்பட்டது