உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் -34 *

1. காப்புப் பருவம் திருமால்

(ஆசிரிய விருத்தம்)

பூவணி பெற்றிட மாமலர் நிற்பவள்

பொன்னொடு நற்பொருள் தந்தருள் பெற்றியவள்

பொற்புறத் தன்வல மார்பினை ஈந்தருள்

பொங்கிடு பாற்கடல் மேற்றுயில் பான்மையன்

பாவணி நல்கிடும் பாமகள் கேள்வனைப்

பண்புடன் தன்திருக் கொப்புளுள் தாங்கியே

பற்றுற வோடுல கோச்சிடும் மால்கழல்

பைந்துழாய் கொண்டுவந் தன்புடன் போற்றுதும்,

காவணி யுற்றிடத் தூமணம் நல்கியே

கையிதழ் நீட்டிய ழைத்திடும் பூக்களும்

கச்சித மாய்த்தலை யாட்டிடைத் தென்றலும்

கண்டுலா வந்திடும் காடநற் பாடியில்3

நாவணி செய்தமிழ் நாவலர் பாடிட

நன்குசி றந்துதி கழ்வுற வேவரும்

நம்பியைச் சீர்தமிழ் நன்குணர் செல்வனை நண்ணிவந் தின்னருள் செய்துபு ரக்கவே.

1.திருமால்

2. பிரமன்

-

3. காடநற்பாடி நற்பாடம் பாடி என மாறுக.

மறைமலையடிகள் பிறந்த ஊர். நாகப்பட்டினத்தை அடுத்த

சிற்றூர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/139&oldid=1595028" இலிருந்து மீள்விக்கப்பட்டது