உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் -34 *

மீனாட்சியம்மை

(வேறு)

செய்யமென் தூமலர்த் தாளொன்று தூக்கியே செஞ்சடை வெண்மதி கங்கையும் தேக்கியே சீர்த்திகொள் மாநடம் செய்திடுந் தன்மையால் சிக்கலை நீக்கியிவ் வையம்பு ரந்திடும் துய்யவெண் மேனியன் தன்னிடப் பாகமாய்த் தோன்றிய மும்முலைத் தொல்புக ழன்னையின்

தூமணிப் பூம்பதம் நெஞ்சுள் ளிருத்தியே

2

சொக்கரின் தீந்தமிழ் தானெடுத் தேத்துதும்,

உய்யவே வைத்திடு மொப்பிலாச் செம்மொழி ஒன்றென இப்புவி ஓம்பிய சீர்மொழி ஊறினைச் செய்தபல் லாட்சிகள் சூழ்ந்ததால் உற்றமெய்த் தன்மையின் மாறிப்பி றர்மொழி1

பையவே வந்ததைப் பற்றியே சேர்ந்திடப்

பான்மையுங் கெட்டதென் றார்த்துடன் மெய்வழிப் பைந்தமி ழின்றனி நன்னயங் காட்டிய

பாலன்ம றைமலை தன்னைப்பு ரக்கவே.

3

1. உமையவள் உ மலையத்துவசன் மகள் தடாதகைப் பிராட்டியாகத் தோன்றியபோது மூன்று மார்புடன் தோன்றிய நிலை.

2. மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் குன்றமெறிந்த குமரவேளும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், தமிழ்ப் புலவராய்த் தோன்றித் தமிழாய்ந்ததாக இறையனாரகப் பொருள் கூறுவதால் தமிழ் சொக்கரின் தீந்தமிழாயிற்று.

3. வடபுல மொழிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/141&oldid=1595030" இலிருந்து மீள்விக்கப்பட்டது