உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் -34 *

முருகன்

(சந்தவிருத்தம்)

வேதாசல நாதா'வருள் தாதாவெனப் போற்றில் வேலாயுத மேதானுடை கோலத்துறு கன்றை வேதாகம நூலோர்? பணி வேந்தேயெனப் பாடில் வீணாய்மிடி வாராவகை வாழச்செயுங் குன்றை நீதாவென நாரார் துதி நீடேயுள மார்க்க

3

நேராய்மயில் மாதோர்புடை சூழக்கவி பெய்தே நீங்காதுள சேர்ந்தேதமிழ் ஈந்தேயருள் வானை நேரார்கழல் பேரார்புகழ் ஏற்றித்துதி செய்வோம். வேதாசல நாதாவருள் தாதாவெனப் போற்றி5 வேலாயுத மேதானுடை சீலத்தனின் தந்தை வேயேயிணை தோளாள்துணைத் தாளோன்தனை யேத்த வீறாய்வரு சீரார்புகழ் வேள்செய்பரி சென்றே

தாதாரணி போதார்திரு மார்பானருள் பூண்டு

தாழாமன மேதான்துணை தானாய்வர நன்கே தாயார்க்குப் பேறார்நெறி தாம்போற்றிடத் தோன்றி தானேதமிழனான்' தனைக் காவல்செயற் கென்றே.

1.சிவபெருமான்.

2. நான்முகன்

3. வறுமை

4. நாராயணன்

5. திருக்கழுக்குன்றத்துச் சிவபெருமான் பெயர் வேதாசலர் அடிகளின் பெற்றோர் குழந்தைப் பேற்றிற்காக இந்த நாற்பது நாட்கள் நோன்பிருந்து, தவத்தின் பயனாய்ச் செவ்வேளைப் போன்ற அடிகளைப் பெற்றனர்.

6. மீண்டும் பிறவாப் பெருநெறி

7. மறைமலையடிகளைக் குறிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/143&oldid=1595032" இலிருந்து மீள்விக்கப்பட்டது