உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

2. செங்கீரைப் பருவம்

செங்கீரைப் பருவம் என்பது குழந்தைகளுக்கு ஒரு காலை மடக்கி ஒரு காலைப் பின்னால் நீட்டி இரு கைகளையும், முன்னே நிலத்தில் ஊன்றித் தலையைத் தூக்கி அமைத்துக் கொண்டு தாயர் பயிற்றும் இனிய சொற்களைக் கூறி ஆடுக எனக் கூறும் பருவமாகும். கீரையாடுதல் என்ற தொடர்க்குச் சொற்களைச் சொல்லித் தலையாட்டுதல் என்றும், சொற்களைப் பேசுதல் என்றும் பொருள் கூறுவர். குழந்தை தலையசைத்துங்க், ங்க் எனக் கூறுதலைக் கேட்டுத் தாய்மார்கள் உவப்பர்.

.

கீர் என்பதற்குச் சொல் எனப்பொருள் கொண்டு செம்மை + கீர் எனப் பிரித்துக் கேட்பார்க்கினிய சொற்களைச் சொல்லும் பருவம் என்றும், கீரம் (க்ஷரம்) என்பதற்குப் பால் எனப் பொருள் காண்டு பால் போலும் இனியமழலை பேச முயலும் பருவம் என்றும், கீரம் - கிளி என்பதால் கிளி ஒரு காலை மரக்கிளையில் வைத்துக் கொண்டு மற்றொரு காலைத் தூக்கிக் கொண்டு முகம் அசைத்து ஒலியெழுப்பி ஆடுவது போலக் குழந்தையை ஆடுமாறு கூறும் பருவம் என்றும் பலவகையாகக் கூறுவர்.

ஆனால் செம்மை + கீரை செங்கீரை எனப் பிரித்து ளமையான கீரைத் தண்டு தன் தலைப் பகுதியிலுள்ள இலைகளின் பாரம் தாங்க மாட்டாமல் காற்றில் ஆடுவது போல இளமையான ஐந்து மாதக் குழந்தை ஒரு காலை மடக்கி, ஒரு காலை நிமிர்த்திக் கழுத்துப் பொறுக்க மாட்டாமல் அசைந்து ஆடுமாறு கூறும் பருவம் என்ற பொருளில் செங்கீரைப் பருவம் என்று கூறுதலே மிகப்பொருத்தமாகக் கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/150&oldid=1595039" இலிருந்து மீள்விக்கப்பட்டது