உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் -34 *

2. செங்கீரைப் பருவம்

(ஆசிரிய விருத்தம்)

பொங்கியெழுங் கங்கையைச் செஞ்சடையிற் கொண்டவன்

புகழ்கழுக் குன்றநாதன்

பொற்பாதம் போற்றியோர் பிள்ளையை வேண்டிடப்

புண்ணியங் கூடிவரவே

திங்கொளி வீசிடத் தேவனருள் கூடிடத்

திரண்டிருந்த வையமுழுதும்

தீந்தமிழ்த் தேன்சுவை தித்திக்கத் தித்திக்கத்

தெள்ளிநித மள்ளிநல்க.

தங்கமனச் செம்மலாய்ச் சைவமனக் காளையாய்த் தகதகப் பொன்மேனியாய்த்' தக்கநற் கல்வியும் தன்னுறுதி மேன்மையும்

தான்கொண்டு நெஞ்சுயர்த்திச்

சிங்கமென வந்தவன் செய்யுபுகழ் தந்தவன்

செங்கீரை யாடியருளே

சின்னம்மை சொக்கனார் தாம்பெற்ற செல்வமே

செங்கீரை யாடியருளே.

1. அடிகள் கண்டாரைக் கவரும் செம்மேனியினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/151&oldid=1595040" இலிருந்து மீள்விக்கப்பட்டது