உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

குன்றெடுத் தானிரை காத்தவன்' மருமகனாய்க் கொடியவினை யோட்டியருளக் குன்றேறி நின்றுவிளை யாடிடு சிவனாங்

குக்குடக் கொடியண்ணலை

ஒன்றிவருந் தோற்றனாய் ஒப்பரிய ஏற்றனாய்

உயர்விக்க வந்தபொலிவும்

உச்சியில் வெண்கொண்டை ஒள்ளொளி வெண்முத்தம் ஒத்திடுங் காதினழகும்

கன்றெழுந் தாலெனத் துள்ளிமகிழ் வெய்திடுங்

கருத்தார்ந்த வெல்லமொழியும்

கற்றவர் மெச்சிடு மொப்பிலாப் புலமையுங்

கண்டவர் மனமகிழ்ந்து

சென்றெடுத் தன்பொடுங் கொஞ்சவரு தங்கமே

செங்கீரை யாடியருளே

சின்னம்மை சொக்கனார் தாம்பெற்ற செல்வமே செங்கீரை யாடியருளே.

1. திருமால்

2. சேவற் கொடியுடைய முருகன்.

127

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/152&oldid=1595041" இலிருந்து மீள்விக்கப்பட்டது