உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் -34 *

இறையவன் தான்படைத் தின்னுயிர்க் கேற்பதாய்

இசைவோடு தந்தநீரில்

இணையற்ற செவ்விதழ்த் தாமரை நாணுவகை இலங்குமணிக் கால்களோடு

மறையவன் தான்தரு மட்டிலாச் சீர்தமிழ்

மகிழ்வோடு காதிற்புக

மலர்ந்திடும் நெஞ்சத்துக் களிப்பினை யொலியாக்கும் மணிபுனை பூங்கைகளும்

முறையுடன் வைத்திடு செயலினால் பெரும்பேறு

முழுமையாய்ப் பெற்றமண்ணாள்

முகத்தோடு தன்னகம் முற்றிலும் தான்பூக்க

மொழிநலம் சேர்த்ததின்பால்

திறையென மேன்மைகள் செலுத்திடக் கொண்டவா

செங்கீரை யாடியருளே

சின்னம்மை சொக்கனார் தாம்பெற்ற செல்வமே

செங்கீரை யாடியருளே.

13

அடிகள் தாமரையும் நாணும்படியாக

விளங்கும்

கால்களோடும், உள்ளக் களிப்பினை ஒலியாக வெளிப்படுத்தும் L மணிபுனைந்த கைகளோடும் தோன்றியதால், நிலமகள் முழுமையான பெறற்கரும் பேறு பெற்றாள். அகமும் முகமும் மலர, மொழிநலம் பேணும் அடிகட்கு நிலமகள் மேன்மைகள் என்னும் நிறைப் பொருளை அளிக்க ஏற்றுக் கொண்டு உவந்த அடிகளைச் செங்கீரை யாடுமாறு வேண்டுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/153&oldid=1595042" இலிருந்து மீள்விக்கப்பட்டது