உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

காவி'யை வென்றவேற் கணையினை வென்றமீன்

கண்ணுடை மதுரையன்னை

கடைநோக்கி லருளாட்சி காட்டிவென் றாற்போலக் கற்பனைக் கெட்டாவெழில்

மேவிடக் கையோடு காலூன்றித் தலைதூக்கி மின்னுமொளிக் கண்களாலே

மிரளாது தெளிவோடு நோக்கியழ கூட்டியே மென்னகைப் பூட்டினர்த்தே

பூவிடைத் தங்குநறுந் தேனெனத் தித்திக்கும் பொங்குதனித் தமிழ்தந்தவா

புரியாத மொழிநீக்கிப் புத்துணர் வூட்டிய பொற்புடை யமுதவூற்றே

சீவிநற் சூழியக் கொண்டைமலர் கொண்டவா

செங்கீரை யாடியருளே

சின்னம்மை சொக்கனார் தாம்பெற்ற செல்வமே

செங்கீரை யாடியருளே.

1. நீலோற்பல மலர்.

2. செங்கீரைப் பருவத்தின் இயல்பு காட்டப்பட்டது.

129

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/154&oldid=1595043" இலிருந்து மீள்விக்கப்பட்டது