உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் -34 *

வானிடைப் புயலன்ன வண்ணனின் தங்கையை

வலம்நீக்கி இடத்தமைத்து

வற்றாத வைகையால் வளமோங்குமதுரையில் வைத்தகால் மாறியாடித்

தேனினு மினியசெந் தமிழீந்த தெய்வமாம் திருத்தில்லை நகரவேந்தன்

தேர்ந்திந்தப் புவிமீது செந்தமிழ் வாழ்ந்திடச் செய்திடற் கெண்ணமிட்டே

மானிடப் பிறப்பினில் மாட்சிகொள் தண்ணருள் மலர்ச்சியா முயிரைவைத்து

மங்காத வொளிநிறை மறைமலை யெனுமுரு மன்னுபுகழ் சேர்த்தளிக்கத்

தீனி1டப் பொலிவோடு தென்னக சேர்ந்தவன்

செங்கீரை யாடியருளே

சின்னம்மை சொக்கனார் தாம்பெற்ற செல்வமே

செங்கீரை யாடியருளே.

15

மீனாட்சியம்மை திருமணம், பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடிய திருவிளையாடலும் சுட்டப்பெற்றன.

திருத்தில்லை நகரவேந்தன் செந்தமிழ் வாழ்ந்திட மறைமலையடிகளைத் தோற்றுவிக்க, அடிகள் தனித்தமிழ்க் கொள்கையை நிறுவித் தமிழ் வளர்க்கத் தென்னகம் சேர்ந்தார். 1. புதிய கொள்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/155&oldid=1595044" இலிருந்து மீள்விக்கப்பட்டது