உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

131

(வேறு)

கானிடை வீசிக் காவிடை புக்குக்

காடம் பாடிதனில்

கட்டியங் கூறி யாழியின்1 தன்மை

காட்டிடுந் தென்றலெழ

ஊனிடை மேவும் நோயினைப் போக்கி ஊக்கம தைச்சேர்க்கும்

ஒப்பறு மேன்மை மருத்துவ ராகி

ஊர்புக ழும்சீர்மை

தானெழச் சொக்க நாதரென் றானார்

தாம்புரி மெய்நோற்பால்

தாயெனச் சின்னம்மைமகிழ்ந் தீந்த

தாழ்வறு சீராளன்

ஆனிடைக் கண்ணன் வேய்ங்குழல் வென்றோன்

ஆடுக செங்கீரை

அம்பல வாணர் தம்மருட் செல்வன்

ஆடுக செங்கீரை.

16

1. சையின்பம்

கருதி யாழின் என்பது யாழியின்

என்றாயிற்று. அடிகளின் தந்தை சொக்கநாதர் காடம்பாடிக் கிராமத்தில் மருத்துவராக விளங்கினார் என்பது வரலாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/156&oldid=1595045" இலிருந்து மீள்விக்கப்பட்டது