உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

133

பொங்கெழி லொன்றுதி ரண்டதைப் போலப்

பொன்னார் திருமேனி

பூவினில் வாழ்பிர மன்திருக் கையாற் பூட்டிய செம்மேனி

கங்கையைத் தன்சடை கொண்டவன் நெற்றிக்

கண்வரு செவ்வேளா

காவினில் பூத்திடு மென்மலர் நெஞ்சுள்

கண்டத மிழ்த்தேனோ

எங்குளன் மன்மதன் இங்கிவன் தானோ

என்றிப் பார்திகைக்க

ஏற்றமுந் தோற்றமுந் தேற்றமும் பெற்றே

ஏந்திடு புகழுடையன்

அங்கனி யின்சுவை தன்மொழி கொண்டவன்

ஆடுக செங்கீரை

ஆய்ந்துத னித்தமிழ் அன்பொடு தந்தவன்

ஆடுக செங்கீரை.

18

அடிகளின் உருவப் பொலிவு தெய்வ வடிவங்களோடு ஒப்பிட்டுப் பாராட்டப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/158&oldid=1595047" இலிருந்து மீள்விக்கப்பட்டது