உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் -34 *

(சந்த விருத்தம்)

குன்றை மோதிடு தோள்வலி கொண்டே வந்தோனே கூறும்செந்தமிழ் எண்ணிரண் டுள்ளே தந்தோனே மன்றுள் ளாடிய மாமணி தன்தாள் செந்தேனே

மாசில் மென்மல ரேய்ந்தம ணத்தை வென்றோனே என்று சௌந்தரப் பேரினள் நெஞ்சே நின்றோனே ஏறு மன்புசெய் யில்லற முய்த்தே சென்றோனே தென்றல் போல்வலம் வந்தவச் செங்கோ செங்கீரை தேடுறு மெய்ப்புகழ் தந்தவச் செங்கோ செங்கீரை

1.அடிகள் தம் 16

வயதிலேயே தமிழ் இலக்கண

இலக்கியங்களைக் கற்றுணர்ந்தார்.

2. அடிகளின் வாழ்க்கைத் துணைவியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/159&oldid=1595048" இலிருந்து மீள்விக்கப்பட்டது