உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் -34 *

சென்னை நகரில் செய்யதமிழ்; சீராய்க் காக்குங் கல்லூரி சிறந்த ஆசான் எனப்போற்றித்

திருவார் பணியிற் சேர்ப்பிக்க

மன்னும் புலமை மாணறிவால்

மாணாக் கருளங் கொள்ளையிட்டு

மலர்ந்த முல்லை யாராய்ச்சி

மதிப்பைக் கூட்ட முறையாகப்

பின்னும் பட்டி னப்பாலை

பெருங்கட் டுரையு மாய்ந்தளித்துப்

பிறங்கு சைவ சித்தாந்தப்

பெருமை யுலகிற் கெடுத்தோதித்

தொன்மைக் கினிமை சேர்த்தபசுந்

துளிரே தாலோ தாலேலோ தூய்மைத் தமிழ்செய் மறைமலையாத்

துணைவா தாலோ தாலேலோ.

26

அடிகள் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த பரிதிமாற் கலைஞரின் உதவியால் அக்கல்லூரியிலேயே தமிழாராய்ச்சியராய் அமர்த்தப் பட்டார். அங்குப் பணியாற்றுங் காலத்தில் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரையும், பட்டினப்பாலை ஆராய்ச்சியுரையும் எழுதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/167&oldid=1595056" இலிருந்து மீள்விக்கப்பட்டது