உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

தங்கத் தகட்டின் மீதினிலே

தகுமோ ரிணையாய் நடுவைக்கத் தலைசேர்ந் திலங்கும் மாணிக்கத்

தனையும் வெல்லும் மாமணியே

வங்கக் கடலின் மீதெழுந்து

வளமார் தமிழின் தேன்சுமந்து

வயலின் பசுமைக் குளிர்தாங்கி

வருமென் தென்றல் பூங்காற்றே

தெங்குங் கதலி'த் தீங்கனியுந்

திரண்ட முலைசேர் பசும்பாலும்

செழித்த கரும்பின் நறும்பாகும்

செறிந்த சுவையின் பெருஞ்சுவையே

தொங்கல்? பூண்டே நவமணிப்பொன்

தொட்டில் தனிலே தாலேலோ

சுவைக்குந் தமிழ்செய் தூமணியே

சுடரே தாலோ தாலேலோ.

143

27

தென்றல் தென் பொதிகை மலையிலிருந்து பிறந்து வருவது இயல்பு. அடிகள் நாகையில் தோன்றியவராதலின் வங்கக் கடலின் மீதெழுந்து வரும். தென்றலாகக் கூறப்பட்டார்.

1. வாழை

2. மாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/168&oldid=1595057" இலிருந்து மீள்விக்கப்பட்டது